கங்கை அமரன் இயக்கிய முதல் படம்.. பிரபுவின் அசத்தல் நடிப்பு… மிகப் பெரிய வெற்றிப் பெற்ற கோழி கூவுது!

By Bala Siva

Published:

இசைஞானி இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன் ஆரம்ப காலகட்டத்தில் பாடல்கள் எழுதிக் கொண்டும், ஒரு சில படங்களில் இசை அமைத்துக் கொண்டும், இருந்தார். இளையராஜாவின் பெரும்பாலான படங்களுக்கு பாடல்கள் எழுதிய இவர் மற்ற இசையமைப்பாளர்களுக்கும் பாடல்கள் எழுதியதோடு சில படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் தான் அவருக்கு இயக்குனராக வேண்டும் என்ற ஆசை வந்த போது இளையராஜா அவருக்கு ஊக்கம் கொடுத்தார். தன்னுடைய பாவலர் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான கோழி கூவுது’l என்ற படத்தை இயக்குவதற்கு இளையராஜா, கங்கை அமரனுக்கு வாய்ப்பு கொடுத்தார். மேலும் அந்த படத்திற்கு அவரே இசையமைத்து கொடுத்தார்.

கடந்த 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி வெளியான இந்த படத்தில் பிரபு, சுரேஷ், சில்க் ஸ்மிதா, விஜி உள்பட பலர் நடித்தனர். இந்த படத்தின் கதை பிரபு ஒரு கிராமத்தில் வெட்டியாக சுற்றி கொண்டிருப்பார். எல்லோரிடமும் வம்பு இழுத்துக் கொண்டு இருப்பார். அவரது அக்காள் மகள் முறை கொண்டவர் விஜி. தனது அக்கா மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பிரபு ஆசைப்படுவார்.

பிரபுவின் முதல் படமும் தோல்வி… 100வது படமும் தோல்வி… சிவாஜி கணேசன் தான் காரணமா?

kozhi koovuthu

ஆனால் அதே கிராமத்தில் உள்ள சில்க் ஸ்மிதா பிரபுவை காதலிப்பார். பிரபு அவரது காதலை நிராகரிப்பார். இந்த நிலையில் தான் அந்த ஊருக்கு போஸ்ட்மேன் ஆக சுரேஷ் வருவார். அவருக்கும் விஜிக்கும் இடையே காதல் ஏற்படும். இந்த நிலையில் திடீரென பிரபு அக்கா மகளை பெண் கேட்கும் போது வேலை வெட்டி இல்லாதவனுக்கு எப்படி பெண் கொடுப்பது என்று அந்த ஊரில் உள்ளவர்கள் பிரபுவை கேலி செய்வார்கள்.

அப்போது அவர் ஆத்திரமடைந்து ராணுவத்தில் சேர்த்து விடுவார். ராணுவத்தில் சேர்ந்து காசு பணம் சம்பாதித்து விட்டு அக்கா மகளை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக சில ஆண்டுகள் கழித்து ஊருக்கு வரும்போது சுரேஷ் விஜி காதலர்கள் ஆகி இருப்பது தெரியவரும்.

ஆனால் இந்த காதலுக்கு ஊரே எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் ஊரின் எதிர்ப்பையும் மீறி இருவருக்கும் திருமணம் செய்து வைப்பார் பிரபு. அதன் பிறகு தன்னை காதலித்த சில்க் ஸ்மிதாவை அவர் கைப்பிடிப்பார்.

பிரபுதேவா – ஐஸ்வர்யா ராய் நடிக்க இருந்த படம்.. திடீரென ஏற்பட்ட மாற்றம்.. 25 வருடங்களுக்கு முன் இதே நாளில் வெளியான சொல்லாமலே!

இந்த படத்தில் இளையராஜா இசையமைத்த ஒன்பது பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியது. குறிப்பாக அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட். இந்த படம் தமிழகத்தில் உள்ள சில திரையரங்களில் 300 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

kozhi koovuthu1

இதற்கு முன்பே பிரபு சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் இந்த படம் தான் அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது. அதேபோல் இந்த படத்தின் வெற்றிக்கு பின் கங்கை அமரன் பல திரைப்படங்களை இயக்கினார். எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டம் உள்பட பாட வெற்றி திரைப்படங்களை இயக்கினாலும் இன்றும் கோழி கூவுது படம் என்றால் உடனே கங்கை அமரன் தான் ஞாபகம் வருவார். அந்த அளவுக்கு ஒரு கிராமத்தில் உள்ள காட்சிகளை மிக அழகாக படமாக்கி இருப்பார்.

முழுக்க முழுக்க ஞானியாக மாறிய வெங்கட் பிரபு! என்ன கொடுமை சார் இது …

முதல் படமே வெற்றி படமானதால் கங்கை அமரன் அடுத்தடுத்து இயக்கிய படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.