பிரபுதேவா – ஐஸ்வர்யா ராய் நடிக்க இருந்த படம்.. திடீரென ஏற்பட்ட மாற்றம்.. 25 வருடங்களுக்கு முன் இதே நாளில் வெளியான சொல்லாமலே!

இயக்குனர் சசி இயக்கத்தில் லிவிங்ஸ்டன் நடிப்பில் உருவான ’சொல்லாமலே’ என்ற திரைப்படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிய நிலையில் இந்த படத்தின் சில சொல்லப்படாத விஷயங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

இயக்குனர் சசி முதலில் இந்த கதையை கலைப்புலி எஸ்.தாணு அவர்களிடம் தான் கூறினாராம். அவரும் இந்த படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டதையடுத்து ஹீரோ பிரபுதேவா என்றும் ஹீரோயின் ஐஸ்வர்யா ராய் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அஜித்துடன் நடிக்க மறுத்த ஷாலினி.. லவ் பண்ணிருவேன்னு பயமா இருக்குன்னு சொன்ன அஜித்.. ‘அமர்க்களம்’ உருவான கதை..!

தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதையை கொண்டதுதான் இந்த ‘சொல்லாமலே’ என்ற திரைப்படம். மிகவும் சுமாரான அழகுடைய ஒரு இளைஞன் மிக அழகான ஒரு பெண்ணை காதலிக்கிறான். அந்த பெண்ணும் அவருடன் கள்ளங்கபடம் இல்லாமல் பழகும் போது ஒரு கட்டத்தில் நாயகன் வாய் பேச முடியாத ஊமையை போல் நடிக்கிறான். ஹீரோ மீது முதலில் இரக்கம் கொண்ட நாயகிக்கு அதன்பின் அவன் மேல் கொஞ்சம் கொஞ்சமாக காதல் வருகிறது.

sollamale2

இதனை அடுத்து ஒரு கட்டத்தில் தான் வாய் பேச முடியாதவன் இல்லை என்று தெரிந்தால் தன்னை நாயகி வெறுத்துவிடுவார் என்ற அச்சப்பட்டு கிளைமாக்ஸில் உண்மையிலேயே தனது நாக்கை அறுத்துக் கொண்டுவிடுவார் என்பது தான் இந்த படத்தின் அதிர்ச்சி கிளைமாக்ஸ்.

இந்த படத்திற்காக தாணு அவர்கள் ஒரு சில லட்சங்கள் செலவு செய்து படப்பிடிப்பு தொடங்க இருந்த நேரத்தில் திடீரென ஒரு முக்கிய காரணத்திற்காக பிரபுதேவா இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். அந்த முக்கிய காரணம் என்ன என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும் என்றாலும் அதை இங்கே சொல்ல வேண்டாம் என்று தான் தோன்றுகிறது.

இந்த நிலையில்தான் வேறு நடிகரை வைத்து இந்த படத்தை தொடங்கலாம் என்று தாணு சொன்னபோது, இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சவுத்ரி அவர்கள் தயாரிக்க முன்வந்துள்ளார், நான் அவருக்காக இந்த படத்தை செய்யட்டுமா என சசி தாணுவிடம் அனுமதி கேட்டுள்ளார்.

தாணுவும் பெரிய மனது கொண்டு தாராளமாக நீங்கள் இந்த படத்தை அவருக்காக இயக்குங்கள், நான் செலவழித்த பணம் கூட எனக்கு தேவையில்லை, நீங்கள் திரையுலகில் நன்றாக வருவீர்கள் என்று வாழ்த்தி வழி அனுப்பினார்.

விஜய், சிம்ரன், ஏஆர் ரஹ்மான், எழுத்தாளர் சுஜாதா இருந்தும் படுதோல்வியான படம்.. விஜய் பேச்சை கேட்காத இயக்குனர்..!

இதனை அடுத்து தான் இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு பதிலாக லிவிங்ஸ்டனும் ஐஸ்வர்யா ராய்க்கு பதில் கௌசல்யாவும் நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் படமாக்கப்பட்டது.

sollamale1 scaled

1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்த படம் வெளியானது. முதல் இரண்டு நாட்கள் இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் பாசிட்டிவ் விமர்சனத்தை பார்த்து இந்த படத்திற்கு கூட்டம் குவிந்தது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இயக்குனர் சசிக்கு வாழ்த்துகள் குவிந்தது.

அதேபோல் மிக அருமையாக லிவிங்ஸ்டன் மற்றும் கௌவுசல்யா நடித்திருந்தார்கள். லிவிங்ஸ்டன் நண்பர்களாக வரும் கரண், விவேக், ஆனந்த் உள்ளிட்டவர்களும் சூப்பராக நடித்திருந்தார்கள். பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் டாக்டராக நடித்திருப்பார். அவரிடம் தான் லிவிங்ஸ்டன் தன்னுடைய நாக்கை அறுத்து விடுங்கள் என்று கூறுவார். ஆனால் ஒரு டாக்டராக தன்னால் அதை செய்ய முடியாது என்ற போது திடீரென லிவிங்ஸ்டன் டாக்டர் அறையில் இருந்த அறுவை சிகிச்சை கத்தியை எடுத்து தனது நாக்கை அறுத்துக் கொள்வார்.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சசிக்கு பல வாய்ப்புகள் வந்தது. அதேபோல் லிவிங்ஸ்டனுக்கும் ஹீரோவாக நடிக்க பல வாய்ப்புகளும் கிடைத்தது.

பீடா கடையில் வேலை.. பாலு மகேந்திரா படத்தில் இருந்து நீக்கம்.. அதன்பின் கொடுத்த சூப்பர்ஹிட்.. விக்னேஷ் திரைவாழ்க்கை..!

ஆனால் அதே நேரத்தில் இந்த படம் பிரபுதேவா மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தால் வேற லெவலில் தமிழ் சினிமாவின் அதிகபட்ச வசூல் செய்த படமாக இருந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...