பலரது ரிங்டோனாக ஒலித்த சரவணன் மீனாட்சி ஏலோ.. ஏலேலோ பாடல்.. அடேங்கப்பா இந்த ஹிட் பாட்டெல்லாம் இவர் பாடியதா?

By John A

Published:

ஒரே ஒரு ஹம்மிங் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக 90’s, 2K கிட்ஸ்-ன் ரிங்டோனாக ஒலித்தது என்றால் அது சரவணன் மீனாட்சி சீரியல் ஏலோ.. ஏலேலோ என்ற ஹம்மிங் ஆகத் தான் இருக்க முடியும். பாடலில் வரிகள் கிடையாது. ஆனால் இந்த ஹம்மிங் வந்தாலே மனதிற்குள் ஏதோ ஒருவித ஈர்ப்பு கிடைக்கும். அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்த ஹம்மிங் ஈர்த்தது.

மேலும் இந்த ஹம்மிங் பாடலைப் பார்ப்பதற்கென்றே விஜய்டிவி முன் சரவணன் மீனாட்சியைப் பார்க்க தவம் கிடந்தனர் இல்லத்தரசிகள். இந்த ஹம்மிங்கைப் பாடியவர் பிரியா பிரகாஷ் என்ற பின்னணிப் பாடகி. வெகுநாட்களாக இந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் யாரென்று தெரியாத நிலையில் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி அதற்கு விடை கொடுத்தது.

அண்ணா சொன்ன ஒற்றை வார்த்தையால் ஓராயிரம் யானை பலம் பெற்ற எம்.ஜி.ஆர்.. இப்படி ஒரு மோட்டிவேஷனா..?

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்பு தான் பிரியா பிரகாஷ் மீடியா வெளிச்சத்திற்கு வந்தார். மேலும் அவர் எந்தெந்தப் பாடல்களைப் பாடியுள்ளார் என்பதைக் கேட்டால் ஆச்சர்யமடைவீர்கள். தளபதி விஜய்க்காக பத்ரி படத்தில் இடம்பெற்ற சலாம் மகராசா என்ற குத்துப் பாடலைப் பாடினார். எனினும் அப்போது பிரபலடையாதவர் சரவணன் மீனாட்சி ஹம்மிங் பாடல் மூலம் ஹிட் ஆனார்.

மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வரும் அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாள் என்ற பாடலில் முதலில் வரும் ஹம்மிங்கையும் இவர்தான் பாடினார். மேலும் புஷ்பா படத்தில் வரும் ஹோ.. ஹோ ஹம்மிங் போன்ற பல புகழ்பெற்ற பாடல்களின் ஹம்மிங் வாய்ஸ் சிங்கர் இவர்தான்.

வாரிசு வேண்டாம் என்று சொன்ன அதிரடி நாயகி.. மனம் திறந்த முதல் லேடி சூப்பர் ஸ்டார்

மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் என்னை அறிந்தால் படத்தில் வரும் அதாரு.. அதாரு பாடலில் வரும் ஹம்மிங்கான வா..ராஜா.. வா..வா.. இதான் உன் டாவா என்ற பாடலையும் பாடி அசத்தியுள்ளார்.

அஞ்சாதே படத்தில் வரும் கத்தாழ கண்ணால  பாடலின் இடையில் வரும் ஹம்மிங் னன னனா னனா..  என இவரது ஹிட் லிஸ்ட் எராளம். மேலும் தசாவதார பாடலின் முகுந்தா.. முகுந்தா.. பாடலில் வரும் கிழவி கமலின் ஹம்மிங் உசுரோட இருக்கான் நான்பெத்த புள்ள.. என்ற மெஹா ஹிட் ஹம்மிங்ஸ் எல்லாம் இவரது குரலில் உதித்தவையே. மேலும் குழந்தைக் குரல், வயதானவர்கள் குரல் என அனைத்திலும் பாடி அசத்தி வருகிறார் பிரியா பிரகாஷ்.

மேலும் உங்களுக்காக...