அண்ணா சொன்ன ஒற்றை வார்த்தையால் ஓராயிரம் யானை பலம் பெற்ற எம்.ஜி.ஆர்.. இப்படி ஒரு மோட்டிவேஷனா..?

அறிஞர் அண்ணா திராவிடர் கழகத்திலிருந்து பெரியாரைப் பிரிந்து தனியாக திராவிட முன்னேற்றக் கழகத்தினை ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்த நேரம். அப்போது அவருடன் துணை நின்றவர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் பலர். கருணாநிதி தன்னுடைய பேனாமுனையாலும், முத்தமிழாலும் திராவிடக் கொள்கைகளை மக்களிடம் வளர்க்க, எம்.ஜி.ஆர் அவர்களோ அண்ணா, கருணாநிதியின் வசனங்களை திரையில் கொண்டு சேர்த்து அதை வெகுஜன, பாமர மக்களிடமும் எளிதில் கொண்டு சேர்த்தார்.

அறிஞர் அண்ணா முதலமைச்சராகப் பதவியேற்கும் முன் அமைச்சரவைப் பட்டியலில் இருந்த எம்.ஜி.ஆர் தனது பெயர் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். ஏனெனில் நான் நடிப்பு துறையில் இருக்கிறேன். மக்களை நம்பக்கம் வைக்க திரையுலகம் ஒரு சாதனை ஏடு.. அதை மக்களுக்காக நான் பயன்படுத்த வேண்டும். அதனால் கட்சிக்காக உழைத்தவர்கள் நம்மோடு கட்சியில் இருப்பவர்களுக்கு அந்த பதவியே கொடுங்கள் என்றார் உயர்ந்த மனதோடு.

வாரிசு வேண்டாம் என்று சொன்ன அதிரடி நாயகி.. மனம் திறந்த முதல் லேடி சூப்பர் ஸ்டார்

இந்நிலையில், அறிஞர் அண்ணாவுக்கு எப்போதும் எம்ஜிஆர் வீட்டு சாப்பாடு பிடிக்கும். அண்ணா பலமுறை எம்ஜிஆருடன் அவரது வீட்டில் உணவு உண்டு உள்ளார். ஒரு நாள் அப்படி உணவு உண்ணும் போது. எம்ஜிஆரும் அண்ணாவும் சில பிரச்சினைகள் குறித்து பேசினார்கள் இறுதியாக அண்ணா அவர்கள் எம்ஜிஆர் பற்றி சொன்னது. மறக்க முடியாத வார்த்தைகள் ஆகும். .

“தம்பி உன் பேர்லே பலர் குறை சொன்னார்கள். நீ ஆட்சி. . அரசியல் விவகாரங்களில் கலந்துக்கொள்வதில்லை.. எப்பவும் நடிப்பிலே இருக்கிற.. சட்டசபை கூட்டத்துக்கு வர்றதில்லைன்னு சொன்னாங்க. .? அவங்களுக்கு தெரியாது நீ தினமும் மேக்கப் போடுறது கட்சிக்காகத்தான் .. ஆயிரம் மேடையிலே நாங்கெல்லாம் சொல்ல முடியாததை நீ ஒரு படத்திலே ஒரு காட்சியிலே ஒரே வார்த்தையில் சொல்லி விடுகிற..

பாரதியார் வேடத்திற்கு முகவரி கொடுத்த பழம்பெரும் நடிகர்… இப்படி ஒரு நடிகரை கொண்டாடத் தவறிய தமிழ் சினிமா!

நீ ராமச்சந்திரன் ஆனால் வானத்துக்கும் சந்திரன் எட்டியிருந்து ஒளி கொடுக்கிறவன். நீ மற்றவங்களுக்கு கைவிளக்கு. கிட்டேயிருந்து ஒளி கொடுப்பவன். உறுதியோடு இருப்பதால் சில பிரச்சினைகளும் தடங்கலும் வரத்தான் செய்யும். எதையும் நீ மற்றவங்களுக்கு வழிக்காட்டியாக இருக்க வேண்டும். தவிர மற்றவர்கள் குறையை ஒரு பொருட்டா நினைக்ககூடாது என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். அண்ணா அவர்களின் இந்த வார்த்தை எம்.ஜி.ஆருக்கு இன்னும் கூடுதல் பலமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...