ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் பாட்டிலேயே கியூட்டாகக் கவர்ந்த சுஜிதா.. அந்தக் குழந்தை இவர்தானா?

Published:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக ஒவ்வொரு இல்லங்களிலும் இன்று தனம் கதாபாத்திரமாக வாழ்ந்து இல்லத்தரசிகள் மத்தியிலும் ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சுஜிதா. மலையாள திரைக்குடும்பத்திலிருந்து குழந்தையாக இருக்கும் போத நடிப்புத் துறையில் அடியெடிடுத்து வைத்தார் சுஜிதா.

குறிப்பாக பாசில் இயக்கிய பூவிழி வாசலிலே திரைப்படத்தில் தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆகிய ஐந்து மொழிகளிலும் குழந்தையாக நடித்து அப்போதே ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார். மேலும் 90-களின் முன்னனி நடிகர்கள் அனைவரின் படங்களிலும் குழந்தையாக, தங்கையாக நடித்திருப்பார் சுஜிதா.

மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதன் முதலாக உருவான ரோஜா படத்தில் வரும் முதல் பாட்டில் சுஜிதா பாட்டு முழுக்க வருவார் என்பது யாருக்காவது தெரியுமா? ஆம்..! ரோஜா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்த சின்ன சின்ன ஆசை பாடலில் நாயகி மதுபாலாவின் தங்கையாக பாடல் முழுக்க வந்து ரசிகர்களைக் கவர்ந்திருப்பார் சுஜிதா.

காலா படத்தை பிளாப் செய்ய நடந்த சதி.. இதுவரைக்கும் யாருமே பேசல.. வேதனைப்பட்ட ரஞ்சித்..

மேலும் இதே போல் உயிரே படத்தில் இடம்பெற்ற குச்சு குச்சு ராக்கம்மா பாடலிலும் அர்விந்த்சாமி, மனீஷா கொய்ராலாவுடன் அமைந்த பாடலில் குழந்தைகளுடன் நடனமாடியிருப்பார் சுஜிதா. மேலும் ஆய்த எழுத்து .திரைப்படத்திலும் நடித்திருப்பார்.

மேலும் வாலி படத்தில் அஜீத்தின் தங்கையாகவும் நடித்துள்ள சுஜிதா கைக்குழந்தையாக இருக்கும் போதே முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தற்போது தமிழ் சீரியல்களில் மிக பிஸியாக நடித்து வருகிறார் சுஜிதா. குழந்தையாக நடித்த போதே ரூ. 5,000த்திலிருந்து 1.50 லட்சம் வரை ஊதியம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...