சோ ராமசாமி திரையுலகில் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தார். அந்தக் காலகட்டத்தில் அவரைத் தேடி சிங்கப்பூரில் இருந்து ஒரு நண்பர் வந்தார். எங்கிட்ட 2 லட்ச ரூபாய் இருக்கு. அதை வச்சிப் படம் பண்ணலாம்னு இருக்கேன். நீங்க தான் அந்தப் படத்தை டைரக்ட் பண்ணனும்னு சொல்லி முக்கியமான சில நிபந்தனைகளை விதித்தார். அதில் மிக முக்கியமானது
அவர்தான் அந்தப் படத்தின் கதாநாயகன் என்றார். அவரது முகத்தைப் பார்த்த சோவுக்கு அவரது முகம் கதாநாயகனுக்கான லட்சணத்தில் இல்லை என்று தெரிந்தது. எப்படி இவரைத் திருப்பி அனுப்புவதுன்னு யோசித்தார். இதுல வேற அந்த நபர் பெரிய பில்டப் கொடுத்தார். நீங்க படத்தை இயக்குங்க. நான் ஹீரோவா நடிக்கிறேன். இந்தப் படத்தைப் பார்த்து ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எல்லாரும் பாராட்டி சான்ஸ் கொடுப்பாங்க.
தொடர்ந்து பல படங்களில் நடிப்பேன். அப்புறம் சினிமா நம்ம கைக்கு வரும் என்றாராம். நாம கோடி கோடியா சம்பாதிக்கலாம் என்றாராம். சோவால அதற்கு மேலும் தாங்க முடியல. அதனால, திரைப்படத்துல நடிக்கிறதுக்கான எந்த லட்சணமும் உங்ககிட்ட இல்ல. அதுமட்டும் இல்லாம உங்களுக்கான கதை எங்கிட்ட இல்ல. அந்தக் கதையை எழுதி முடிக்க குறைந்தது 3 ஆண்டுகள் ஆகும். அதனால நீங்க போய் வாங்கன்னு திருப்பி அனுப்பினாராம் சோ.
இன்னைக்கு உள்ள இயக்குனர்கள்ல எத்தனை பேரு இப்படி நடிகர்களைத் திருப்பி அனுப்புறாங்க? மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.