1500 திரைப்படங்கள்.. 14 மொழிகள்.. நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் திரையுலக சாதனை..!

Published:

தமிழ் திரை உலகில் காமெடி வேடத்தில் நடித்து சுமார் 1500 படங்களில் நடித்தவர் ஓமக்குடி நரசிம்மன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 14 மொழிகளில் நடித்துள்ளார். தனது ஒல்லியான தேகத்தையே அவர் பிளஸ் ஆக்கிக் கொண்டு ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார்.

நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் திருச்சியை பூர்வீகமாகக் கொண்டாலும் இவர் கும்பகோணத்தில் தான் சிறுவயதில் வளர்ந்தார். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே அவர் கேபி சுந்தராம்பாள் நடித்த அவ்வையார் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

ஆனால் அவரது பெற்றோர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்த வேண்டாம், படிப்பில் கவனம் செலுத்து என்று கூறியதையடத்து  அவர் டித்து பட்டம் பெற்று சென்னை எல்ஐசியில் பணியாற்றினார். வேலையில் அவர் இருந்து கொண்டே இடையிடையே நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். குறிப்பாக சுருளிராஜன் இவருக்கு நண்பரான பின்னர் அவருடைய உதவியால் பல நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அவர போல நடிகர் இங்க யாரும் இல்ல… எம்ஜிஆர் கிட்டயே சிவாஜியை புகழ்ந்த வாலி… என்ன சொன்னார் தெரியுமா..?

images 53 1

அந்த வகையில் சுருளிராஜன் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் திருக்கல்யாணம் என்ற திரைப்படத்தில் அவர் காமெடி வேடத்தில் அறிமுகமானார். திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் தான் ஒரு நாடகத்தில் பயில்வான் ஆக நடித்தார். அந்த படத்தில் அவர் ஓமக்குச்சி என்ற கேரக்டரில் நடித்ததை அடுத்து அவருடைய ஒரிஜினல் பெயரான நரசிம்மன் பெயருடன் ஓமக்குச்சி என்று ஒட்டிக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, பிரபு, விக்ரம் என மூன்று தலைமுறை நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். அவர் 1500 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை தனது பல படங்களிலும் பயன்படுத்திக் கொண்டவர் விசு. குறிப்பாக சம்சாரம் அது மின்சாரம் உள்பட பல படங்களில் அவருக்கு நல்ல கேரக்டரை கொடுத்திருப்பார். வித்தியாசமான வசனம் பேசுவது, உடல் மொழியால் நடிப்பது உள்ளிட்டவை அவரது பிளஸ் ஆகும்.

6 வயதில் நடிப்பு.. எம்ஜிஆர் சிவாஜி படங்களில் ஒரு பாடலுக்கு நடனம்.. ஜோதிலட்சுமியின் வாழ்க்கை பயணம்..!

images 52

சுந்தர் சி நடித்த தலைநகரம் திரைப்படம் தான் இவரது கடைசி படம். இந்த படம் 2006 ஆம் ஆண்டு வெளியானது.  அதன் பின்னர் ஓமக்குச்சி நரசிம்மன் தொண்டை புற்றுநோலையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி அவர் காலமானார்.
ஓமக்குச்சி நரசிம்மனுக்கு சரஸ்வதி என்ற மனைவியும் விஜயலட்சுமி, நிர்மலா மற்றும் சங்கீதா ஆகிய மூன்று மகள்களும் ஓம் காமேஸ்வரா என்ற ஒரு மகனும் உண்டு. நரசிம்மன் வாரிசுகள் யாருமே திரையுலகில் நடிக்கவில்லை.

நடிகர் நரசிம்மன் தான் சினிமாவில் சம்பாதித்த காசை வைத்து தனது மூன்று மகள்களுக்கும் சிறப்பாக திருமணம் செய்து வைத்தார். திரை உலகில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து குறைந்த வருமானம் பெற்றாலும் அவர் சிக்கனமாக குடும்பத்தை நடத்தி மூன்று மகள்களையும் ஒரு மகனையும் நன்றாக படிக்க வைத்திருந்தார்.

சிவாஜி கணேசன் இந்த கதாபாத்திரத்திலா…? வசூலிலும் சாதனை செய்த சாதனை..!!

அனைவரையும் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தார். சொந்த படம் எடுப்பது என்ற தவறை செய்யாமல் குடும்பத்தை வறுமையில்லாமல் காப்பாற்றியது தான் அவர் செய்த மிகப்பெரிய சாதனை.

மேலும் உங்களுக்காக...