ரஜினிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Published:

ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. இந்த திரைப்படம் கடந்த மாதம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உலக அளவில் சூப்பர் டூப் ஹிட் அடித்தது.

ஜெயிலர் திரைப்படம் ரஜினியின் திரை வாழ்க்கைக்கு மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்துள்ளதாக ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதை தொடர்ந்து இந்த திரைப்படம் இயக்குனர் நெல்சனுக்கும் கம்பேக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்திற்கு முன்னதாக தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் வசூல் ரீதியாக பல சாதனை படைத்தாலும் விமர்சன ரீதியாக பின்னுக்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இணைந்து நடித்த படம் தான் லால் சலாம். லைக்கா ப்ரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ ஆர் ரகுமான் இசையில் ரஜினி காந்தியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படம் உருவாகியுள்ளது.

கிரிக்கெட்டை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ரஜினி கேமியோவாக நடித்துள்ளார். இந்த படத்திற்காக அவர் மூன்று முதல் ஐந்து நாட்கள் மட்டுமே கால்சிட் கொடுத்ததாகவும் படத்தில் 10 நிமிடம் முதல் 15 நிமிட காட்சிகள் மட்டுமே ரஜினி வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ரஜினி 40 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

தற்போது லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து மாஸ் அப்டேட் கிடைத்துள்ளது. முதலில் இந்த படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த முடிவில் தற்போது மாற்றம் ஏற்பட்டு இந்த படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியிட படக்குழு முயற்சித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தை ரிலீஸ் செய்ய பட குழு முடிவு செய்திருந்தது. ஆனால் அன்று பல முன்னணி ஹீரோக்களின் படங்கள் மோத உள்ளதால் அதற்கு பதிலாக டிசம்பர் 28 புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்யலாம் என படக்குழு நினைத்திருந்தது.

ஜெயிலர் படத்தின் தெறிக்க விடும் வெற்றியை தொடர்ந்து சம்பள விசயத்தில் கரார் காட்டும் ரஜினி!

ஆனால் இதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தை பிறந்தநாள் அன்று இந்த படத்தை ரிலீஸ் செய்யுமாறு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். ரஜினியின் பிறந்தநாள் அன்று இந்த படம் வெளியானால் அவரது ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமையும். இந்த நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்தால் நல்ல வசூலும் ஈட்ட முடியும் என்ற எண்ணத்தில் இந்த கோரிக்கையை படக்குழுவிடம் முன் வைத்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

ஆனால் ரிலீஸ் தேதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் வெளியாகாத பட்சத்தில் ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியே மீண்டும் ஒரு ரஜினி படம் வெளியானால் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்று விடுவார்கள் என்பது உண்மை.

மேலும் உங்களுக்காக...