’ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலின்போது ஓடி ஒளிந்த பாகிஸ்தான் அதிகாரிகள்.. உயிருக்கு பயந்த செய்த கேவலமான செயல்..!

  இந்தியாவின் “சிந்தூர்” நடவடிக்கையில் துல்லிய தாக்குதல்: பாகிஸ்தான் படையினருக்கு கடும் அதிர்ச்சி, அலறிய ஆணையர்கள்! இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது இந்திய ஆயுதப்படைகள் மேற்கொண்ட துல்லியமான ஏவுகணை தாக்குதல்கள், பாகிஸ்தான் மற்றும்,…

pak army

 

இந்தியாவின் “சிந்தூர்” நடவடிக்கையில் துல்லிய தாக்குதல்: பாகிஸ்தான் படையினருக்கு கடும் அதிர்ச்சி, அலறிய ஆணையர்கள்!

இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது இந்திய ஆயுதப்படைகள் மேற்கொண்ட துல்லியமான ஏவுகணை தாக்குதல்கள், பாகிஸ்தான் மற்றும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் முற்றிலும் நாசமாகின. இந்த தாக்குதல்களின் பயங்கரத்தன்மையும், துல்லியமும், பாகிஸ்தான் ராணுவத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்தியாவின் இந்த தாக்குதலின்போது பாகிஸ்தான் ராணுவத்தின் சில முக்கிய ராணுவ அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும் சிலர் உயிருக்கு பயந்து அருகிலுள்ள கட்டடங்களில் ஒளிந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

IANS செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய ராணுவத்திலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், முசஃபராபாத், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் பகுதியில் உள்ள பாகிஸ்தான் 75வது படை பிரிகேட்டின் ஒரு கட்டுப்பாட்டாளர், தனது அலுவலகத்தை விட்டு ஓடிப்போன நிலையில் மீண்டும் பணிக்கு திரும்ப மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அவரை மற்ற அதிகாரிகள் அலுவலகத்தை திறக்க சொல்லியபோது, அவர் “முதலில் உங்களுடைய உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அலுவலகத்தை பிறகு பார்த்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

மற்றொரு தகவலின்படி, பாகிஸ்தான் ராணுவ கட்டுப்பாட்டாளர் ஒருவர், இந்தியப் படைகள் தாக்கியபோது அருகிலுள்ள பள்ளிவாசலுக்குள் ஒளிந்து கொண்டதாகவும், அவர் நான் நமாஸ் செய்கிறேன், இப்போதைக்கு வர முடியாது என தனது படைவீரர்களிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்தியப் படைகளின் தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவத்தினுள் பரபரப்பு, குழப்பம் ஏற்பட்டது. 16வது பாலொச் ரெஜிமென்ட் கேப்டன் ஹஸ்னைன் ஷா, ஹாஜி பீர் பகுதியில் இந்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என ரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

75வது காலாடை பிரிகேடு, இந்தியப் படைகளின் பிரதான இலக்காக இருந்தது. இந்திய ராணுவத்தின் கணிப்புப்படி, 64 பாக் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு, 96 பேர் காயமடைந்துள்ளனர். இதற்கு பதிலாக, பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது. ஆனால் அதனால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கை, ஒரு கடுமையான எச்சரிக்கையாக மட்டுமல்ல, தீவிரவாதத்திற்கு எதிரான உறுதியான செயல் என்றும், இதன் தாக்கம் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு ஒரு பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.