முதல் படம்.. முதல் காட்சியிலேயே கொலை செய்யணும்.. தயங்கிய நெப்போலியன்.. பாரதிராஜா செய்த செயல்..!!

By Aadhi Devan

Published:

Nepoleon: 1991 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் புது நெல்லு புது நாத்து. இந்த திரைப்படத்தில் ராகுல், சுகன்யா, நெப்போலியன், பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். புது நெல்லு புது நாத்து படம் நெப்போலியனுக்கு முதல் படம்.

வீச்சு அருவாளால் கையை வெட்டும் காட்சி.. நான் விஜயகாந்தை நம்பினேன்.. தலைவாசல் விஜய் பகிர்ந்த தகவல்..!!

இந்த படத்தில் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதன் பிறகு பல படங்களில் நாயகன், குணச்சித்திர வேடம் போன்ற கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடித்திருந்தாலும் வில்லன் கதாபாத்திரம் இவருக்கு நன்றாக பொருந்தும். அதிலும் இந்த படத்தில் ஒரு வயதான வில்லன் பாத்திரத்தில் நடித்த நெப்போலியனுக்கு அப்போது வயது 27 தான்.

இந்நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி நெப்போலியன் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறிய போது 30 நாள் படப்பிடிப்பில் 25 நாள் முடிந்து விட்டது ஆனால் தன்னை ஒரு நாள் கூட நடிக்க வைக்கவில்லை. முதல் படம் என்பதால் தான் மிகவும் பயந்ததாக கூறியுள்ளார்.

எமர்ஜென்சி எமர்ஜென்சி.. விமானத்தில் ஹன்சிகாவின் சேட்டை.. சிவகார்த்திகேயன் பகிர்ந்த வேடிக்கையான சம்பவம்..!!

அதன்பிறகு 26 வது நாள் தனக்கு மேக்கப் போட்டதாகவும் அந்த மேக்கப் போட்டவுடன் கண்ணாடியில் தன்னை பார்த்தவுடன் மிகுந்த வேதனை ஏற்பட்டு அங்கிருந்து ஓடிவிடலாமா என்று தோன்றியதாகவும் கூறியுள்ளார். ஏனென்றால் 27 வயது நெப்போலியனுக்கு 60 வயது கிழவன் வேஷம் போட்டு விட்டது வேதனையாக இருந்தது என்று கூறியுள்ளார்.

அதோடு அந்த படத்தில் அவர் நடித்த முதல் காட்சி ஒரு வாத்தியாரை தூக்கில் போட்டு கொலை செய்யும் காட்சி. இதனால் ஆரம்பத்திலேயே கொலை செய்யும் காட்சியில் நடிக்க வேண்டுமா என்று நெப்போலியன் தயங்கியுள்ளார். இதை உணர்ந்து கொண்ட பாரதிராஜா நீ தயங்குகிறாயே சரி பொறு என்று கூறிவிட்டு வசனத்தில் மங்களகரமான மாற்றம் கொண்டு வந்தார்.

கழுதையோட பட்ட பாடு.. ஒரு காட்சிக்கு அப்புறம் கைதட்டி கொண்டாடினோம்.. மாரி செல்வராஜ் பகிர்ந்த தகவல்..!!

அப்படி நெப்போலியன் திரையில் பேசிய முதல் வசனம் “வர்ற லட்சுமியை யாருடா தடுத்து நிறுத்த முடியும். நான் எப்பவுமே நல்லது தான் சொல்லுவேன். நல்லது தான் செய்வேன்” என்பதுதான். இதனால் நெப்போலியன் சற்று மன திருப்தியுடன் முதல் காட்சியில் நடித்ததாக பகிர்ந்திருந்தார்.