கழுதையோட பட்ட பாடு.. ஒரு காட்சிக்கு அப்புறம் கைதட்டி கொண்டாடினோம்.. மாரி செல்வராஜ் பகிர்ந்த தகவல்..!!

Mari Selvaraj: கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெளியான படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் தனுஷ் நடித்துள்ளார். சந்தோஷ நாராயணன் இசையமைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் லால் நட்ராஜ் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தென் மாவட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஒரு கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெற்றதா நாயகன் இறுதியில் ராணுவத்திற்கு சென்றாரா என்பது தான் கதை. இந்த படத்தில் இடம்பெற்ற கண்டா வர சொல்லுங்க பாடலை ரசிகர்கள் கொண்டாடினர்.

தனுஷ் ரம்யா கிருஷ்ணன் சேர்ந்து நடிக்க இருந்த படம்.. கடைசி நேரத்தில் ஹீரோயின் மாறியது எப்படி?

60 கோடி வரை இந்த படம் வசூல் செய்து வெற்றி படமாக திகழ்ந்தது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சியை படாதமாக்கும் போது நடந்த சம்பவம் குறித்து குறித்து இயக்குனரான மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார். இந்த படத்தின் ஆரம்பத்தில் ஒரு சிறுமி இறப்பது போன்ற காட்சி இருக்கும்.

அந்த சிறுமி படத்தில் அங்கங்கு தோன்றுவது போன்று அமைந்திருக்கும். அப்படி ஒரு காட்சியில் சிறுமி நிற்பது போன்று அவர் அருகே கழுதை ஒன்று மலை மீது ஏறி சென்று நிற்பது போன்று காட்சி படமாக்கப்பட்டிருக்கும். இது பற்றி மாரி செல்வராஜ் அவர்கள் பகிர்ந்துள்ளார்.

பா.ரஞ்சித் வரிசையில் ஓடிடி-க்குத் தாவிய மாரி செல்வராஜ்.. அடுத்த பட ஹீரோ யாரு தெரியுமா?

கழுதை மலை ஏறுமா என்று படக்குழுவில் இருந்த அனைவருக்கும் சந்தேகமாக இருந்துள்ளது. சிலர் கழுதை ஓடியே பார்த்தது கிடையாது என்று கூறியுள்ளனர். ஆனால் கழுதை ஓடுவதை மாரி செல்வராஜ் படம் ஆக்கிவிட்டாராம். அது மலை ஏற வேண்டுமே என்று யோசித்தபோது முதலில் கழுதை மலை ஏறாமல் நின்றுள்ளது.

அதன் பிறகு சிறுமியை மலை மீது நிற்க வைத்து விட்டு அங்கிருந்து சத்தம் போட கூறியுள்ளனர். அப்போது கழுதை மலையின் மீது ஆள் நிற்பதை பார்த்தவுடன் அழகாக மலையின் மீது ஏறி சரியாக சிறுமியின் அருகே வந்து நின்றுள்ளது. இதனை படமாக்கிக் கொண்டிருந்த மாரி செல்வராஜ் சிறுமியை கழுதையின் மீது கை வைக்குமாறு கூறியுள்ளார்.

தளபதி எஸ்கேப்… ஆனால் தல நிலைமைதான் என்னவோ… நேக்கா திட்டப்போடும் திரையுலகம்…

அப்போது படக் குழுவினர் கை வைத்தால் கழுதை ஓடிவிடும் என்று கூறியுள்ளனர் ஆனால் கழுதை சிறுமி கை வைத்த பிறகும் அசையாமல் நின்றுள்ளது. இந்த காட்சியை படமாக்கி முடித்த பிறகு மாரி செல்வராஜ் மற்றும் பட குழுவினர் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.