எமர்ஜென்சி எமர்ஜென்சி.. விமானத்தில் ஹன்சிகாவின் சேட்டை.. சிவகார்த்திகேயன் பகிர்ந்த வேடிக்கையான சம்பவம்..!!

Siva Karthikeyan: சிவகார்த்திகேயன் நடிப்பில் 2014 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி வெளியான திரைப்படம் மான் கராத்தே. திருக்குமரன் இயக்கிய இந்த படத்தில் ஹன்சிகா மோத்வானி, வம்சி கிருஷ்ணா, சூரி, சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

லியோவில் விஜய் மகனாக மேத்யூ தாமஸ்.. இவரை தேர்ந்தெடுக்க என்ன காரணம்.. வெளியான தகவல்..!

அனிருத் இசையில் பாக்சிங்கை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் பாக்சிங் என்றால் என்ன என்று தெரியாத சிவகார்த்திகேயனை 2 கோடி ரூபாய் பரிசு பணத்திற்கு ஆசைப்பட்டு நான்கு பேர் நண்பர்களாக அவருக்கு தேவையான பயிற்சிகளை கொடுத்து அவரை பாக்ஸிங் போட்டியில் கலந்து கொள்ள வைப்பார்கள்.

இறுதியில் அவர் வெற்றி பெற்றாரா பரிசுத்தொகை கிடைத்ததா என்பது தான் கதை. இந்த படம் 56 கோடி ரூபாய் வரை வசூல் செய்து வெற்றி படமாக திகழ்ந்தது. இந்த படத்தில் ஆறு பாடல்கள் இடம் பெற்றிருக்கும். இதில் யுகபாரதி வரிகளில் பென்னி தயாள், சுனிதி சௌகான் ஆகியோர் இணைந்து பாடிய டார்லிங் டம்பக்கு பாடல் சண்டிகரில் படமாக்கப்பட்டது.

ரஜினி முன்னாடி எப்படி..? இந்த காட்சிக்கு ரொம்ப தயங்கினேன்.. வசந்த் ரவி பகிர்ந்த தகவல்..!!

இந்நிலையில் இந்த பாடலின் படப்பிடிப்பு முடிந்து சென்னைக்கு வரும் போது நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை சிவகார்த்திகேயன் அவர்கள் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதாவது சண்டிகரிலிருந்து விமானத்தில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது ஹன்சிகா விமான ஊழியரை எமர்ஜென்சி என்று அழைத்துள்ளார்.

உடனே அவரிடம் வந்த ஊழியரிடம் எமர்ஜென்சி எமர்ஜென்சி என்று கூறியுள்ளார். அதற்கு ஊழியர் என்ன ஆனது என்று கேட்டபோது விமானத்தை திருப்ப முடியுமா சண்டிகருக்கு உடனே போக வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு ஊழியர் எதற்கு என்று கேட்டுள்ளார். அப்போது ஹன்சிகா என்னுடைய சார்ஜரை ஹோட்டல் ரூமில் மறந்து வைத்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

விஜய் படத்துல நடிக்கணுமா.. நழுவிய சத்யராஜ்.. துணிச்சலாக விஜயகாந்த் எடுத்த முடிவு.. அந்த மனசுக்கா இப்படி ஒரு நிலைமை!

அதுவரை பதட்டமாக கேட்டுக் கொண்டிருந்த ஊழியர் அமைதியாக ஹன்சிகாவை பார்த்துள்ளார். இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் சத்தமாக சிரித்து விட ஊழியரின் கவனம் சிவகார்த்திகேயன் பக்கம் சென்றுள்ளது. இதேபோல் திடீரென்று ஹன்சிகா ஏதாவது ஒரு சேட்டையை செய்து விடுவார் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.