1985ம் ஆண்டு இளையராஜாவின் வருடம்.. எந்த இசையமைப்பாளரும் கனவில் கூட இப்படி ஒரு முயற்சியை செய்ய முடியாது

Published:

1985 இசைஞானி இளையராஜா வருடம்.. அந்த வருடம் இசையமைத்த தமிழ் படங்கள் மட்டுமே 55. இதில் கைதியின் டைரி, உயர்ந்த உள்ளம், காக்கி சாட்டை , அந்த ஒரு நிமிடம் என நான்கு கமல் படங்களும் ராகவேந்திரா, மிஸ்டர் பாரத், படிக்காதவன் என மூன்று ரஜினி படங்களும் அடங்கும்.

இந்த படங்கள் எல்லாம் அப்போதைய உச்ச நட்சத்திரங்களின் கமர்ஷியல் படங்கள் ஆகும். ஆனால் அதையும் தாண்டி பெரிய ஹிட் கொடுத்தார் இளையராஜா. எந்த இசையமைப்பாளரும் கனவில் கூட இப்படி ஒரு முயற்சியை செய்துவிட முடியாது. ஏனெனில் லிஸ்ட் அவ்வளவு பெரியது.

சிவக்குமார் நடித்த சிந்து பைரவி, சிவாஜி நடித்த முதல் மரியாதை, பாண்டியராஜ் நடிப்பில் வந்த ஆண்பாவம், மோகன் நடிப்பில் வந்த இதயக் கோயில், தென்றலே என்னைத் தொடு, உதயகீதம், குங்குமச்சிமிழ், முரளி நடிப்பில் வெளியான கீதாஞ்சலி, பகல் நிலவு, எஸ்வி சேகர், நதியா நடிப்பில் வெளியான பூவே பூச்சூடவா போன்றவை மிகப்பெரிய ஹிட்டான படங்கள்.

இந்த படங்களில் உள்ள பாடல்கள் எல்லாம் இன்றைக்கும் 80களில் பிறந்தவர்களின் விருப்பமான பாடல்கள் ஆக இருக்கும். இளையராஜா என்ற ஒற்றை மனிதர், ஒரே ஆண்டில் இத்தனை படங்களுக்கும் இசையமைத்து உள்ளார். அத்தனையும் நாம் மனதை வருடும் வகையில் இருக்கும். ஏதோ ஒரு ஏக்கம், தொலைந்த எதிர்காலம், நடக்காமல் கனவாகி போன பல்வேறு விஷயங்களுக்கு மருந்து போல் இந்த பாடல்கள் எல்லாம் இருக்கும்.

இதயத்தை வருடும் பாடல்கள் மட்டுமல்ல, புரட்சி பாடல்களையும் அந்த ஆண்டில் இளையராஜா கொடுத்திப்பார். அதேபோல் மசாலா பாடலையும் கொடுத்திருப்பார். அலை ஓசை (போராடடா ஒரு வாளேந்தடா..), சின்ன வீடு (திரணனா..) என பாடல்கள் எல்லாம் வேற லெவலில் இருக்கும். இளையராஜாவின் 1985ம் ஆண்டு சாதனையை முறியடிக்க இப்போது உள்ள எந்த இசையமைப்பாளராவது முறியடிக்க முடியுமா என்று 80களில் பிறந்த ரசிகர்கள் கேட்கிறார்கள். உண்மையில் 80களில் வந்த பாடல்களை இப்போதும் மன அமைதிக்காக போட்டு கேட்பவர்கள் அதிகம்.

இளையராஜாவுடன் பணிபுரிய மறுப்பு.. புதுமுகங்களை வைத்து தரமான சம்பவம்.. டி. ராஜேந்தரின் அறியப்படாத பக்கம்.!

ஆனால் இப்போது எடுத்த பாடல்களை அப்படி யாரும் கேட்பது இல்லை. சொந்த ஊரை விட்டு வந்தவர்கள், மலை பிரதேசம் போகிறவர்கள், நண்பர்களுடன் ஜாலியாக இருக்க விரும்புவர்கள் என எல்லாருமே 80களில் வந்த பாடல்களை அதிகம் கேட்பார்கள். 80களில் இசையமைப்பாளர் இளையராஜாதான் பெரும்பாலான படங்களுக்கு இசையமைப்பாளர்.

இளையராஜா சொன்னது போல் அவரை படத்தில் இசையமைக்க வைக்க அப்போது பல இயக்குனர்கள் தவமிருந்தனர். காரணம் அந்த அளவிற்கு போட்ட பாடல்கள் எல்லாமே ஹிட். பாடல்களை பார்க்கவே பலரும் திரையரங்குகளுக்கு அப்போது வந்தார்கள். தியேட்டர்களுக்கு அந்த காலத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் வர இளையராஜாவின் இசையும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

மேலும் உங்களுக்காக...