குடிபோதையில் உளறிய கண்ணதாசன்.. அதையும் மெட்டுப்போட்டு ஹிட் ஆக்கிய எம்.எஸ்.வி.

By John A

Published:

கவிஞர் கண்ணதாசனைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். எந்த அளவிற்கு பாடல்கள், கவி புனைவதில் வல்லவரோ அதே அளவிற்கு அவரது பெர்ஷனல் பக்கங்களும் சற்று சறுக்கல்களாகத் தான் இருந்துள்ளது. தீவிர மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தவர்தான் கண்ணதாசன். அப்படி ஒருநாள் குடித்துவிட்டு இவர் எம்.எஸ்.வி யிடம் கோபமாகப் பேசிய வார்த்தைகளையே மெட்டுப் போட்டு ஹிட் பாடலாகக் கொடுத்தவர் எம்.எஸ்.வி. அந்தப் பாடல் தான் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்‘ படத்தில் இடம்பெற்ற ‘சொன்னது நீதானா சொல்.. சொல்.. என்னுயிரே‘ என்ற பாடல்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் கண்ணதாசன் இணைந்தால் நிச்சயம் அந்த பாடல் ஹிட் தான் என்று சொல்லும் அளவுக்கு இருவருக்கும் இடையே அவ்வளவு புரிதலும் நெருக்கமும் இருந்தது. அதேபோல் இவர்களுக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவதும், ஒருவர் மீது ஒருவர் கோபப்படுவதும் நிகழ்ந்துள்ளது. அந்த வகையில், எம்.எஸ்.வி கோபப்பட்டதால் கண்ணதாசன் ஒரு ஹிட் பாடலையே கொடுத்துள்ளார்.

1962-ம் ஆண்டு ஸ்ரீதர் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான படம் நெஞ்சில் ஓர் ஆலயம். முத்துராமன் தேவிகா இணைந்து நடித்த இந்த படத்தில், நோயால் பாதிக்கப்பட்ட முத்துராமன் தனது மனைவி தேவிகாவிடம் நான் இறந்த பிறகு நீ மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்வார். அந்த இடத்தில் தேவிகா ஒரு பாடலை பாடுவார். இந்தக் காட்சிக்குப் பாடல் எழுதுவதற்காக எம்.எஸ்.வி கண்ணதாசன் இருவரும் பெங்களூர் ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

“இதுக்குக் கீழே இறங்க முடியாது..“ இளசுகளைக் கிறங்கடித்த ‘கட்டிப்புடி, கட்டிப்புடிடா பாடல். உருவான ரகசியம் உடைத்த வைரமுத்து

அப்போது மதுபழக்கம் இருந்த கண்ணதாசன் முதல் நாள் குடித்துவிட்டு தூங்கியுள்ளார். இதனை பொறுத்துக்கொண்ட எம்.எஸ்.வி அடுத்த நாளும் கண்ணதாசன் அதேபோல் மது அருந்திவிட்டு தூங்கிவிட்டதால் கோபத்தில் அவரின் அறைக்கு சென்று, “அவரை யாரைவது கூட்டி வாருங்கள் இல்லை என்றால் நான் இப்போதே ஊருக்கு புறப்படுகிறேன். குடிகாரன் கூட இப்படித்தான் நடக்கும்” என்று கூறியுள்ளார். இதன் பிறகு உடனே கண்ணதாசன் அறை கதவு திறந்துள்ளது.

வெளியே வந்த கண்ணதாசன் “சொன்னது நீதானா விசு” என்று கேட்டுள்ளார். அதற்கு எம்.எஸ்.வி அது நான் இல்லை அது வந்து என்று இருக்க ‘சொன்னது நீதானா சொல் சொல் என் உயிரே‘ இதுதான் பல்லவி போய் மெட்டுப் போடு வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் எம்.எஸ்.வி மெட்டு போட சொன்னபடியே வந்த கண்ணதாசன் முழு பாடலையும் எழுதி கொடுத்துள்ளார். அப்படி வந்த ஹிட் பாடல் தான் “சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே” என்ற பாடல். எம்.எஸ்.வி கோபத்தில் கூறி வார்த்தையால் ஒரு ஹிட் பாடல் கொடுத்த கண்ணதாசன் இதேபோல் பல தருணங்களில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.