“இதுக்குக் கீழே இறங்க முடியாது..“ இளசுகளைக் கிறங்கடித்த ‘கட்டிப்புடி, கட்டிப்புடிடா பாடல். உருவான ரகசியம் உடைத்த வைரமுத்து

இன்றும் மிட்நைட் மசாலா பாடல்களில் குஷி படத்தில் இடம்பெற்ற கட்டிப்புடி, கட்டிப்புடிடா கண்ணாளா என்ற பாடலுக்குத் தான் முதலிடம். விஜய்-மும்தாஜ் ஆடிய இந்தப் பாடலுக்கு தேவா இசையமைத்திருந்தார். ஷங்கர் மகாதேவன், வசுந்தராதாஸ் ஆகியோர் பாடிய இப்பாடலின் வரிகளை வைரமுத்து எழுதியிருந்தார். ஆனால் முழு வரிகளையும் அவர் எழுதவில்லை.

இப்பாடல் உருவான விதம் பற்றி வைரமுத்து பேட்டி ஒன்றில் கூறும் போது, “தேவா எனக்கு பிடித்த இசையமைப்பாளர். ரொம்ப அன்பர், ரொம்ப ரசிகர், ரொம்பவும் மரியாதை தெரிந்தவர். குஷி படத்துக்கு பாடல் எழுதி முடிச்சாச்சு. ஒருநாள் தேவா என்னை அழைச்சு ‘ஒரு கமர்ஷியல் சாங்’ பண்ணனும் சார்-ன்னு சொன்னாரு. ‘ஏன் இதுவரைக்கும் பண்ணதெல்லாம் கமர்ஷியல் சாங் கிடையாதா?’-ன்னு கேட்டேன்.

‘கட்டிப்புடி கட்டிப்புடா’ பாடலுக்கு சும்மா டம்மியாக ரெண்டு லைன் எழுதி இருக்கேன். அது டைரக்டர், தயாரிப்பாளருக்கு புடிச்சிருக்கு. நீங்க தப்பா நினைக்கலான அதையே நாங்க வச்சுக்கலாமான்னு கேட்டார் தேவா. சரி பாடுங்க-ன்னு சொன்னேன். அவர் இந்தப் பாடலை பாடினார். உடனே இது அப்படியே ஓகே-ன்னு சொன்னேன். அப்படியே வச்சுங்க-ன்னும் சொன்னேன்.

காரில் வரும்போது என் உதவியாளர், ‘அந்த வரி கொஞ்சம் கீழே இருக்கே, அதை ஏன் ஓகே சொன்னிங்க’ன்னு கேட்டார். அத விட கீழ என்னால எழுத முடியாதுன்னு நான் சொன்னேன். அந்த தொடக்க வரி நான் எழுதவில்லை. அதன் பல்லவி முழுதுமே நான் எழுதவில்லை.

சொர்க்க வாசலுக்கே அழைத்துச் செல்லும் இளையராஜாவின் இந்தப் பாடல்.. மனுஷன் என்னமா மியூசிக் போட்டுருக்காரு தெரியுமா? மெய்மறந்த சுஜாதா

அப்பாடலில் என்னுடைய வரிகள் எதுவென்றால், ‘ஆக்ஜிசன் இல்லாமல் இமயமலை ஏறாதே, கற்பனை இல்லாமல் கட்டிலின் மேல் சேராதே’ அப்பிடின்னு போட்டுருப்பேன். அதெல்லாம் கொஞ்சம் கவித்துவமா இருக்கும். இதெல்லாம் என்ன தெரியுமா?, வாழ்க்கையில எல்லாம் அம்சங்களும் வேண்டியிருக்கு. கொண்டாட்டம் வேண்டியிருக்கு.

இந்த புனிதம் ஒருபக்கம். இந்த கொண்டாட்டம் ஒருபக்கம். இந்த கேளிக்கை ஒருபக்கம். வேடிக்கை ஒருபக்கம், எல்லாம் சேர்ந்த சமூகத்துல இதற்கும் ஒரு பங்கு இருக்கும். இதை நான் ஞாயப்படுத்தவில்லை ஆனா புரிஞ்சுக்கிறேன். வாழ்க்கையில் இரண்டு விஷயங்கள் இருக்கு. சில விஷயங்களை ஏற்றுக்கொள்வது. எல்லாத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு வைரமுத்து கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...