டிவிட்டர் வேண்டாம்.. இன்ஸ்டா போதும்.. தல தோனி எடுத்த அதிரடி முடிவு

Published:

இன்றை அரசியல் அனைத்தும் மக்களை நேரில் சந்தித்து நடப்பது பெரும்பாலும் குறைந்து விட்டது. கட்சியினர் அனைவரும் டிவிட்டரிலும், பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக மட்டுமே கட்சியை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

சமூக வலைதளங்கள் பிரபலங்களுக்கு பல வகைகளில் நன்மை பயப்பதாக இருந்தாலும் சில நேரங்களில் அதுவே தலைவலியாகவும் மாறிவிடுகிறது. பொய்யான வீடியோக்கள் பரவுவது, மீம்ஸ் கிரியேட்டர்ஸ் டிரோல் செய்வது போன்றவற்றில் சிக்கி சின்னபின்னமாகி விடுகின்றனர்.

இவற்றில் நமது தல தோனி எப்பவும் கிங் தான். ஒரு போஸ்ட் போட்டால் கூட ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து விடுகிறது. டிவிட்டர், இன்ஸ்ட்டாகிராம் போன்றவற்றில் அவ்வப்போது தனது வீடியோக்களைப் பதிவேற்றி ரசிர்கர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார் தோனி. ஆனால் சமீப காலங்களாக டிவிட்டரை பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகிறாராம். இன்ஸ்ட்டாகிராம் பயன்படுத்துவதையே அதிகம் விரும்புகிறார் தோனி.

தோனியின் இந்த முடிவு குறித்து அவரே கூறும் போது, “டிவிட்டரை விட இன்ஸ்டாகிராம் பயன்படுத்தவே அதிகம் விரும்புவேன். டிவிட்டரில் எந்த நல்ல விஷயங்களும் நடப்பதில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை டிவிட்டரில் ஏதாவது நல்ல விஷயங்களைப் பதிவிட்டால் அதனைத் திரித்து பல வகைகளில் சர்ச்சையாக்கி விடுகின்றனர். அதில் நான் இருக்க வேண்டும்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

உதவி செய்வதில் KPY பாலாவுக்குப் போட்டியாக இறங்கிய கூல் சுரேஷ்.. இது வேற லெவல்ல இருக்கே..!

மேலும் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஏதாவது ஒரு வீடியோவைப் பதிவிட்டு நான் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வேன்” என்றும் கூறியுள்ளார் தல தோனி. உண்மையாகவே டிவிட்டரில் போடும் போஸ்ட்களுக்கு நல்ல கருத்துக்கள் வருகிறதோ இல்லையோ உடனடியாக அதனைத் திரித்து மீம்ஸ்களாகவும், டிரோல் செய்வதற்கு மட்டுமே அதிகமாக டிவிட்டர் கணக்கைப் பயன்படுத்திவருகிறார்கள்.

மேலும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் வாசகங்களையும், கருத்துக்களையும் பதிவிட்டுபிறர் மனதைப் புண்படுத்தும் நோக்கிலும் டிவிட்டரில் பல கருத்துக்களும், வீடியோக்களும் பதிவிடப்படுகின்றன.

இதனை உணர்ந்துதான் தோனி இப்படி ஒரு முடிவினை எடுத்திருப்பாரோ..!

மேலும் உங்களுக்காக...