உதவி செய்வதில் KPY பாலாவுக்குப் போட்டியாக இறங்கிய கூல் சுரேஷ்.. இது வேற லெவல்ல இருக்கே..!

Published:

சினிமாவில் நீ பெரிய ஸ்டாரா..? நான் பெரிய ஸ்டாரா.. ? என்ற போட்டியும், விளையாட்டில் நீயா நானா என மோதிப் பார்ப்பதும், அரசியலில் உன் கட்சியா என் கட்சியா என மோதிப் பார்ப்பதும் தான் வழக்கம். ஆனால் நம்ம கூல் சுரேஷ் இப்போது இவர்கள் எல்லோருக்கும் சவால் கொடுக்கும் விதமாக உதவி செய்வதில் KPY பாலாவுடன் போட்டி போடப் போகிறாராம்.

கலக்கப் போவது யாரு புகழ் பாலா இப்போது நகைச்சுவை நிகழ்ச்சிகளைக் காட்டிலும் நன்மைகள் செய்தே அதிக புகழ் பெற்று வருகிறார். இல்லையென்று வருபவர்களுக்கு தன்னால் முடிந்த அளவு உதவிகளைச் செய்து வர நாளுக்கு நாள் அவருக்கு ரசிகர்களும், அவரது உதவும் மனப்பான்மைக்கு ஆதரவும் பெருகி வருகிறது. ஆனால் அதே சமயம் இவருக்கு எப்படி இவ்வளவு பணம் வருகிறது என்ற சர்ச்சையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதோபோல்தான் நடிகர் கூல் சுரேஷும். நடிகர் கூல் சுரேஷ் காமெடி வேடங்களில் நடித்து வந்தாலும் பொதுவெளிகளிலும் சில கோமாளித்தனமான செயல்களைச் செய்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகிறார். சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் சிம்பு படங்கள் வந்தாலே தலைவனைப் பிடிக்க முடியாது. மேலும் அவ்வப்போது மற்ற நடிகர்களின் படங்களுக்கும் புரோமோஷன் செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் வித்யாசமான முறையில் பிரச்சாரங்கள் மேற்கொண்டார்.

ஆண்பாவம் ஷுட்டிங்கில் சீதாவைக் கன்னத்தில் அறைந்த பாண்டியராஜன்.. காமெடி படத்தில் நடந்த முரட்டு சம்பவம்

தற்போது கூல் சுரேஷுக்கு ஞானோதயம் பிறந்துள்ளது போலும். இயலாதவர்களுக்கு உதவிகள் செய்ய ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் நேற்று ஒருவருக்கு சொந்தமாக ஆட்டோ வாங்கிக் கொடுத்து அவர் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார். கலீல் என்பவருக்கு ஆட்டோ வாங்கிக் கொடுத்து அதை அவரே பூஜைபோட்டு ஜாலியாக ஒரு ரைடும் சென்று அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றியிருக்கிறார் கூல் சுரேஷ். கூல் சுரேஷின் இந்தச் செயலைப் பார்த்து நெட்டிசன்கள் இப்போதுதான் உருப்படியான காரியம் பண்ணியிருக்கிறார் என கமெண்ட்டுகளைப் பதிவேற்றி வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...