பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியன் குரலிற்கு அடிமையான எம்.ஜி.ஆர்.. அடிமைப்பெண் படத்தில் வாய்ப்பு கொடுத்தது எப்படி?

Published:

இந்திய திரை உலகில் முன்னணி பாடகராக இருந்தவர் எஸ் பி பாலசுப்ரமணியன். அடிமைப்பெண் படத்தில் தனக்கு எம்ஜிஆர் எப்படி வாய்ப்பு கொடுத்தார் என்பதை பற்றி ஒரு நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியோடு கூறினார்.

அப்போது தெலுங்கு படங்களில் பாடிக் கொண்டிருந்த எஸ் பி பாலசுப்ரமணியன், 1969 ஆம் ஆண்டு எம் ஜி ஆரின் அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்ற ஆயிரம் நிலவே வா என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படம் எம்ஜிஆர் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

மேலும் கே வி மகாதேவன் இசையில் பாடல்கள் அனைத்தும் படத்திற்கு பலமாக அமைந்தது. இந்த படத்தில் பாடல் பாட வாய்ப்பு கிடைத்தது குறித்து பேசிய எஸ் பி பாலசுப்ரமணியன், நான் ஒரு ஸ்டூடியோவில் தமிழ் பாடலை தெலுங்கில் டப்பிங் செய்து பாடிக் கொண்டிருந்தேன். அதை கேட்ட எம்ஜிஆர் அவர்கள் இந்த படம் நம்ம படத்தின் பாடல் போல உள்ளதாக நினைத்து ஒருவரை அனுப்பி யார் பாடுகிறார் என பார்த்து வர அனுப்பி வைக்கிறார். அவரும் தெலுங்கில் டப்பிங் நடக்கிறது என கூறியுள்ளார்.

சில நாள் கழித்து எம் ஜி ஆர் அடிமை பெண் படத்திற்க்காக கே வி மகாதேவனிடம் இந்த பையனின் குரல் கேட்டேன் மிகவும் அழகாக இருக்கிறது என்னுடைய படத்தில் ஒரு பாடலுக்கு வாய்ப்பு கொடுங்கள் என எம் ஜி ஆர் கூறியுள்ளார்.

அதன் பின் எஸ் பி பாலசுப்ரமணியனுக்கு அழைப்பு வர ராமாபுரம் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு ரிகர்சல் நடந்து கொண்டிருந்தது. அங்கு நானும் சுசிலா அம்மாவும் அதில் கலந்து கொண்டோம் என்றும், நான்கு நாட்கள் முடிந்து ரெகார்ட் நடக்கும் முன் எனக்கு டைபாய்டு காய்ச்சல் வந்து படுத்த படுக்கையாகினேன் என்றும் எஸ் பி பி கூறினார்.

அப்போது படத்தின் தயாரிப்பாளர்,எஸ் பி பியிடம் எம்ஜிஆர் பாடலை பாட அனைவரும் தவம் இருக்கிறார்கள் ஆனால் உனக்கு வாய்ப்பு கிடைக்கும் இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தத்தோடு கூறினார். நானும் என் தலைவிதி அவ்வளவுதான் என்று நினைத்துக் கொண்டு இருந்து விட்டேன்.

அடுத்த பத்து நாட்கள் கழித்து எம்ஜிஆர் நான் எப்படி இருக்கிறேன் என்று பார்த்து வருமாறு ஒருவரை அனுப்பினார். நானும் ஐந்து நாட்களில் ரெக்கார்டிங் வைத்துக் கொள்ளலாம் என்று கூறினேன். அதேபோல் ஐந்து நாட்கள் கழித்து ரெக்கார்டிங் வைத்தார்கள். ஏதோ ஒரு பாடல் கொடுப்பார்கள் என்று நினைத்தேன் ஆனால் ஆயிரம் நிலவே வா என்ற பாடல் எனக்கு கொடுத்தார்கள்.

எனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் எம்ஜிஆர் சூட்டிங்கை தள்ளி வைத்துள்ளார். அதன் பிறகு அந்த பாடலை பாடி முடித்தேன். ஆனாலும் எனக்கு மனது கேட்காமல் எம்ஜிஆர் இடம் கேட்டு விட்டேன், எனக்காக ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்ட பொழுது நீ என்ஜினியரிங் படிக்கிற மாணவன் ரிகர்சல் முடித்து நண்பர்களும் எல்லோரிடமும் எம்ஜிஆர் படத்தில் பாடப்போவதாக சொல்லி இருப்பார்.

விஜய்யின் அம்மா ஒரு பெரிய டைரக்டரா? விஜய்யின் முதல் படத்திற்கு மட்டும் இல்லாமல் 13 படத்திற்க்கு கதை எழுதிய சோபா சந்திரசேகர்!

ஆனால் உனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் இந்த பாடல் வேறு யாராவது பாடியிருந்தால் பாலு பொய் சொல்லி இருக்கான் என்று உன் நண்பர்கள் தப்பாக நினைக்க மாட்டார்களா அதனால் தான் உனக்கு உடல் நிலை சரியாகும் வரை காத்திருந்தேன் என எம் ஜி ஆர் கூறியதாக எஸ் பி பாலசுப்ரமணியம் கூறினார்.

மேலும் உங்களுக்காக...