கண்ணதாசனை வீட்டிற்குள் பூட்டி வைத்த எம்.ஜி.ஆர்! சிரிக்க சிரிக்க என்னை சிறையிலிட்டாள் பாடல் உருவான கதை!

Published:

மக்கள் திலகம் எம்.ஜி. ஆருக்கும் கண்ணதாசனுக்கும் இடையே நட்பு சுமுகமாய் இருந்த காலத்தில் கண்ணதாசன் மிகவும் பிரபலமடைந்த பாடலாசிரியர். கண்ணதாசன் கொஞ்சம் பிசியாக இருந்த நேரம் அதனால் எம்.ஜி. ஆர்-க்கும் பாடல் எழுத உண்மையாகவே நேரம் இல்லை என்று தவித்து வந்தார்.

அப்போது கவிஞரை காண வந்தார் எம்.ஜி. ஆர். எனக்கு பாட்டு எழுதி தரவில்லை என்றால் கவிஞர் இங்கிருந்து அனுப்ப முடியாது என்று சொல்லி, அவர் இருந்த அறைக்கதவை பூட்டி விட்டாராம், ஜன்னல் வெளிப்பக்கம் இருந்த சாவிக்கொத்தை காட்டி பாடல் எழுதி தரவில்லை என்றால் இங்கிருந்து நீங்கள் போக முடியாது என்று சிரித்துக் கொண்டே சொல்லி இருக்கிறார் எம்.ஜி. ஆர்.

கவிஞர் கண்ணதாசன் சிரித்து கொண்டு உடனே இரண்டு வரிகள் எழுதினாராம், அது சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள் கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய் என்று இதை வெளிப்புறம் இருந்து பார்த்துவிட்டு எம்ஜிஆர் உள்ளே வந்து நான் கதவை பூட்டவில்லை சும்மா சாத்திவிட்டு தான் சென்றேன் என்று சமாதானம் செய்துள்ளார்.

கவிஞர் கண்ணதாசனும் பாடலை திரைப்படத்திற்கு என்று எழுதி தந்தாலும் பல வரிகள் இந்த பாடலில் கவிஞருக்கும், எம்ஜிஆருக்கும் பொருந்தும்படியாக தான் அமைந்திருக்கும். இன்பம்-துன்பம் எது வந்தாலும் இருவர் நிலையும் ஒன்றே, எளிமை-பெருமை எது வந்தாலும் இருவரும் வழியும் ஒன்றே போன்ற வரிகளை குறிப்பாக சொல்லலாம்.

அவர் எழுதிய வரிகள் இதுபோல வேறு வேறு சூழலுக்கும் பொருந்தும் வண்ணம் பாடல் புனைந்து கொடுத்தது தான் கண்ணதாசனின் தனித்திறமை. காலங்கள் பல கடந்தும் இன்றும் அந்த பாடல்கள் எல்லாம் நாம் உதடுகளில், எண்ணங்களில் இருப்பதே இதற்கு சாட்சி. மேலும் சூழலுக்கு ஏற்ப கவிதை எழுதுவதிலும் அந்த கவி வரிகளுக்குள் கதாபாத்திரத்தை திணிப்பதும் கவிஞருக்கு கைவந்த கலை.

வாலி வருவதற்கு முன்னும், அரசியலில் எம்.ஜி.ஆர் அவர்களோடு முரண்பாடு வருவதற்கு முற்பட்ட காலகட்டத்தில் கண்ணதாசன், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு எழுதியது போல திரைப்பாடல் யாரும் எழுதியதில்லை.

விஜய்யின் அம்மா ஒரு பெரிய டைரக்டரா? விஜய்யின் முதல் படத்திற்கு மட்டும் இல்லாமல் 13 படத்திற்க்கு கதை எழுதிய சோபா சந்திரசேகர்!

வேட்டைக்காரன் படத்தில் மாபெரும் சபைகளில் நீ நடந்தால் என்ற பாடலும், நான்கு பேர்கள் போற்றவும் நாடு உன்னை வாழ்த்தவும் என்ற இரண்டு பாடல்களை கண்ணதாசன் அவர்கள் வரிகளில் எழுதி அசத்தியிருப்பார். உலகம் பிறந்தது எனக்காக அதில் குயில்கள் பாடும் கலைக்கூடம் கொண்டது எனது அரசாங்கம் என்ற பாடலை பாசம் என்ற படத்திற்காக எழுதியிருப்பார் கவிஞர் கண்ணதாசன். எம்ஜிஆர்க்கு கண்ணதாசன் மேல் அளப்பரிய அன்பும் மரியாதையும் உண்டு. அதனால் தான் அரசவை கவிஞராக்கி அழகு பார்த்தது என் ஜி ஆர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...