இளமை துள்ளலான அந்த எம்ஜிஆர் பாடலுக்கு 64 வயது… உருவான பின்னணி

Published:

புரட்சித்தலைவர் எம்ஜிஆரைப் பொருத்தவரை அவர் சினிமாவில் உள்ள அனைத்து விஷயங்களையும் விரல் நுனியில் தெரிந்து வைத்திருப்பவர். அதே போல தனது ரசிகர்களுக்கும் எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதையும் தெரிந்து வைத்து இருந்தார். தனது படங்களில் வரும் காட்சிகளில் அவர் பெரும்பாலும் நல்ல விஷயங்களே வருமாறு பார்த்துக் கொள்வார்.

எந்த ஒரு இடத்திலும் மது அருந்துவதை, போதைப்பழக்கங்களுக்கு அடிமையாவது, மங்கையுடன் உல்லாசம் போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டார். அதனால் தான் தாய்க்குலங்களின் மத்தியில் அவருக்கு பேராதரவு ஏற்பட்டது. அதே போல தனது படங்களில் பாடல் காட்சிகள் அருமையாக வர வேண்டும் என்பதில் அதிகப்படியான கவனம் செலுத்துவார்.

அதற்காக இசை அமைப்பாளர்களின் அருகில் இருந்து தனக்கு வேண்டிய பாடல்களை வாங்கி விடுவதில் அவர் கில்லாடி. அதே போல பாடலின் வரிகளிலும் அவர் மிகுந்த கவனம் செலுத்துவார்.

அதனால் தான் அவரது பெரும்பாலான பாடல்கள் அது காதல் பாடலாக இருந்தாலும் சரி. தத்துவப்பாடல்களாக இருந்தாலும் சரி. இன்று வரை நாம் சிலாகித்துக் கேட்கிறோம். அந்த வகையில் இந்தப் பாடலுக்கு 64வயது. அது என்னன்னு பார்க்கலாமா…

எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த மன்னாதி மன்னன் படத்துல இன்று வரை மறக்க முடியாத பாடல்னா அது ஆடாத மனமும் உண்டோ பாடல் தான். அந்தப் பாடலுக்கு 64 வயது. பாடல் வரிகளை மிக அழகாகப் பாடியிருந்தாங்க எம்எல்.வசந்தகுமாரி.

அவர் ஒரு திரைப்பட பின்னணிப் பாடகி மட்டுமல்ல. கர்நாடக இசையில் தேர்ந்தவர். இவர் நூற்றுக்கணக்கான திரைப்பாடல்களையும், கர்நாடக ஒலிநாடாக்களையும் மட்டும் விட்டுச் செல்லவில்லை. ஸ்ரீவித்யா என்ற அருமையான நடிப்புக் கருவூலத்தையும் நம்மிடையே விட்டுச் சென்றார்.

அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும் என்று ஒரு நிருபர் கேட்டபோது அது ஒரு டிராஜிடின்னு பதில் அளித்தாராம் அவர். ஆனால் உண்மையிலேயே அவரது வாழ்க்கை ஒரு மெலடி என்கிறார் சங்கீத விமர்சகரான வாமனன். மேற்கண்ட தகவல்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

1960ல் எம்.நடேசன் இயக்கத்தில் வெளியான படம் மன்னாதி மன்னன். எம்ஜிஆர், அஞ்சலிதேவி, பத்மினி, பி.எஸ்.வீரப்பா உள்பட பலர் நடித்துள்ளனர். கண்ணதாசன் கதை எழுதிய படம். எம்எஸ்.வி. இசையில் அனைத்துப் பாடல்களுமே சூப்பர்ஹிட்.

இந்தப் படத்தில் அச்சம் என்பது மடமையடா, ஆடாத மனமும், கனிய கனிய, கண்கள் இரண்டும், எங்களின் ராணி, ஆடும் மயிலே, அவளா இவளா, காவேரி தாயே, தண்டை கொண்டு, நீயோ நானோ, கலையோடு, காடு தழைக்க ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.

 

மேலும் உங்களுக்காக...