தங்கலான் பெயரின் அர்த்தம் இதுதான்… பா.ரஞ்சித் பகிர்வு…

Published:

பா ரஞ்சித் சென்னை ஆவடியில் பிறந்து வளர்ந்தவர். கல்லூரியில் படிக்கும் போது சினிமாவின் மீது ஆர்வம் கொண்டிருந்தார் பா ரஞ்சித். கல்லூரி காலத்தில் பிலிம் சேம்பரில் சேர்ந்து திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டார். கல்லூரி படிப்பை முடித்த உடனே சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று எண்ணத்துடன் இருந்தவர் பா ரஞ்சித்.

ஆரம்பத்தில் உதவி இயக்குனராக சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்த பா ரஞ்சித், 2006 ஆம் ஆண்டு வெளியான ‘தகப்பன்சாமி’ 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை 600028’ ஆகிய படங்களில் பணியாற்றினார். பின்னர் தமிழ் சினிமாவின் திரைப்பட இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் திரைப்பட தயாரிப்பாளராகவும் பணியாற்றினார் பா ரஞ்சித்.

2012 ஆம் ஆண்டு காதல் நகைச்சுவை திரைப்படமான ‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பா. ரஞ்சித். அவரது இரண்டாவது படமான கார்த்தி நடித்து 2014 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. பின்னர் 2018 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் அவர்களை வைத்து ‘கபாலி’ ‘காலா’ ஆகிய இரண்டு திரைப்படங்களை எழுதி இயக்கி பிரபலமானார் பா ரஞ்சித்.

நீலம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த பா ரஞ்சித் 2019 ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ படத்தை தயாரித்தார். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ , ‘பொம்மை நாயகி’ போன்ற படங்களை தயாரித்தார் பா ரஞ்சித்.

தற்போது விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் பா ரஞ்சித். அந்த படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சாதிய கொடுமைகளால் ஓடுக்கப்படும் மக்களின் துன்பங்களை இவரது படங்களில் பெரும்பாலும் எடுத்துரைப்பார் பா ரஞ்சித்.

சமீப காலமாக தங்கலான் பட ப்ரமோஷன் விழாக்களில் கலந்து கொண்டு வரும் பா ரஞ்சித், தங்கலான் என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்பதை பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் இருக்கும் தலைவனை தங்கலான் என்று அழைக்கின்றனர். எந்த பிரச்சினை வந்தாலும் ஊருக்காகவும் தன் சமூகத்தின் மக்களுக்காகவும் முன்னே நின்று அனைத்து பிரச்சனைகளையும் சந்திக்கும் ஒருவரை தங்கலான் என்று அந்த சமூகத்தினர் அழைக்கின்றனர். இதை ஆராய்ந்து கண்டுபிடித்த பிறகு தங்கலான் என்ற பெயரை நான் தேர்வு செய்து வைத்தேன் என்று பகிர்ந்துள்ளார் பா ரஞ்சித்.

மேலும் உங்களுக்காக...