திரை உலகை பொருத்தவரை ஒரு நடிகருக்கு நூறாவது படம் என்பது முக்கியமானது என்று கூறுவார்கள். அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி ஆகியோர் ஒரே நேரத்தில் ஐந்து படங்களுக்கு மேல் நடித்து வந்ததால் நூறாவது படம் என்பதை மிக எளிதில் எட்டி விட்டார்கள். ஆனால் தற்போது அஜித், விஜய், சூர்யா ஆகியோர் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டும் நடிப்பதால் அவர்கள் நூறாவது படத்தை எட்டுவார்களா என்ற சந்தேகம் உள்ளது.
ஆனால் தமிழ் சினிமாவில் நூறாவது படத்தை எட்டிய நடிகர்களில் ஒரு சிலர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்கள். அதில் வெற்றிப் பெற்ற முன்னணி நடிகர்கள்எம்ஜிஆர், சிவாஜி மற்றும் விஜயகாந்த் மட்டுமே. மற்ற நடிகர்களின் நூறாவது படம் துரதிஷ்டவசமாக தோல்வி அடைந்தது.
இப்படி ஒரு படத்தை மிஸ் பண்ணிட்டோமே.. பிரபல நடிகர்கள் மிஸ் செய்த படங்கள்..!
மக்கள் திலகம் எம்ஜிஆரின் நூறாவது படம் ஒளிவிளக்கு. இந்த படம் சூப்பர் ஹிட்டாகியது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.
அதேபோல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நூறாவது படம் நவராத்திரி. முதன் முறையாக தமிழ் திரை உலகில் ஒரு நடிகர் ஒன்பது வேடங்களில் நடித்திருந்தார் என்றால் அது இந்த படம்தான். இந்த படமும் நல்ல வெற்றியை பெற்றது.
நடிகர் கமல்ஹாசனின் நூறாவது படம் ராஜபார்வை. அவரே தயாரித்த இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இந்த படம் கமலஹாசனுக்கு பல கோடி ரூபாய் நஷ்டத்தை கொடுத்ததோடு தோல்வி படமாக அமைந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது நூறாவது படமாக ஸ்ரீ ராகவேந்திரா படம்தான் இருக்க வேண்டும் என்று பிடிவாதமாக நடித்தார். இந்த படம் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை தன்னுடைய நூறாவது படம் இதுதான் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இந்த படம் எதிர்பார்த்து வெற்றியை பெறவில்லை.
நடிகர் பிரபுவின் நூறாவது படம் ராஜகுமாரன். இந்த படத்தின் கதை நன்றாக இருந்தாலும் படம் எடுத்த விதம் சரியில்லை என்றும் திரைக்கதை மிகவும் வீக்கானது என்றும் கூறப்பட்டதால் இந்த படம் தோல்வியடைந்தது.
சினிமான்னா இப்படித்தான் இருக்கணும்.. தமிழ் சினிமாவை புரட்டி போட்ட ‘16 வயதினிலே’
விஜயகாந்த் நடித்த நூறாவது படம் கேப்டன் பிரபாகரன். ஆர்கே செல்வமணி இயக்கத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அதேபோல் நடிகர் சத்யராஜ் நடித்த நூறாவது படம் ‘வாத்தியார் வீட்டு பிள்ளை’. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த நூறாவது படம் மன்னவரு சின்னவரு. இந்த படத்தில் சிவாஜி கணேசன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தாலும் இந்த படம் தோல்வி அடைந்தது. அதேபோல் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடித்த நூறாவது படமான தலைமகன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
தந்தையின் சாயல் சிறிதும் இல்லாமல் நடிப்பில் வெளுத்து வாங்கிய இளைய திலகம்
தமிழ் சினிமாவை பொறுத்தவரை எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜயகாந்த் ஆகிய மூவரை தவிர 100வது படம் மற்ற முன்னணி நடிகர்களுக்கு தோல்வியைத் தான் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.