ராசாவே உன்னை விட மாட்டேன்… பாட்டில் மயங்கி படத்திற்கு சம்மதித்த நடிகை

Published:

காயத்ரி… இந்த பேரை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? அவர் வேறு யாருமல்ல. அரண்மனைக்கிளி படத்துல வரும் ஒரு ஹீரோயின் தான் இந்த காயத்ரி. ராஜ்கிரண் படத்துல அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இவர் கண்களே ஆயிரம் கதைகள் பேசும். அந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி இவர் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

Kayathri 4
Kayathri 4

செம்பருத்தி படம் நடிச்சிட்டு இருந்தேன். அப்புறம் இந்திக்குப் போயிட்டேன். அங்க நடிக்கும் போது என்னோட ஒரு போட்டோவைப் பார்த்துட்டு ராஜ்கிரண் சார் மும்பைக்கு வந்து எங்கிட்ட இந்தப் படத்தோட கதையை சொன்னார். இதுல 2 கேரக்டர் இருக்கு.

நீங்க ஏதாவது ஒண்ணுல கண்டிப்பா நடிக்கணும்னு சொன்னார். மியூசிக் யாருன்னு கேட்டேன். இளையராஜா சார்னு சொன்னாரு. அப்போவே இந்தில இளையராஜா சார் ரொம்ப பாப்புலர். ராசாவே உன்னை விட மாட்டேன் என்ற பாடல். அந்த மியூசிக் ரொம்ப பிடிச்சது. ஆனா லிரிக்ஸ் புரியல. எனக்கு அப்போ சுத்தமா தமிழ் தெரியாது.

ஆனா அந்த மியூசிக் என்னோட ஹார்ட்ட டச் பண்ணிட்டு. என்னோட கண்களை நல்லா காட்டணும்னு அப்போ கேட்டுக்கிட்டேன். ஆனா நீங்க கண்ணுலயே விளையாடணும்னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப பிடிச்ச சாங் இது தான். எனக்கு இந்தப் படத்துல டயலாக் ரொம்ப கம்மி. புல்லா எக்ஸ்பிரஷன்தான்.

Kayathri
Kayathri

பூங்குயிலே பாட்டு அவ்வளவா புரியல. அதுல புல்லா குளோசப்ல என்னாட எக்ஸ்பிரஷன்ஸ எடுத்துருப்பாங்க. கடைசில ஒரு ட்ராலி ஷாட் இருக்கும். அப்போ யாரை லவ் பண்றீங்கன்னு கேட்கும்போது நான் அவரோட பேரை ராசய்யான்னு கூட சொல்ல மாட்டேன். மீசைக்காரன்னு சொல்வேன்.

படத்துல பார்க்கும் போது எனக்கு பூங்குயிலே பாட்டு பிடிக்கும். ஆனா கேட்கும் போது இன்னிக்கு வரைக்கும் என்னோட பேவரைட் சாங்னா அது ராசாவே உன்னை விட மாட்டேன் தான்.

முதல்ல ராஜ்கிரண் தான் ஹீரோன்னு சொன்னதும் ரொம்ப பயந்துட்டேன்… அதனால வேண்டாம்னு சொன்னேன். சுருட்ட முடி, கடா மீசை, வேட்டியை மடிச்சிக் கட்டிக்கிட்டு நல்ல பாடி பில்டர் மாதிரி இருப்பாரு. நான் ரொம்ப சின்னவளா இருப்பேன்.

ஆனா ரொம்ப நல்லவரு ராஜ்கிரண். ரொம்ப கேசுவலா பேசிட்டு இருந்தாரு. அதுல பயம் போயிடுச்சு. எதாவது நான் தப்பு பண்ணும்போது மம்மி சத்தம்போடுவாங்க. ராஜ் சத்தம் போட மாட்டாரு.

Poonkuile song
Poonkuile song

அதுக்கு அப்புறமா எனக்கு நல்ல கேரக்டர் அமையல. மீ டூ பிரச்சனையும் ஒரு காரணம். அதனால நிறைய படங்கள்ல நான் நடிக்கல. மீ டூ பிரச்சனையைப் பொருத்த வரைக்கும் முதல்ல அதுக்கு அடாப்ட் ஆயிட்டு அப்புறமா 5 வருஷம் கழிச்சி கம்ப்ளெய்ண்ட் பண்றது தப்பு. அதுக்கு முதல்லயே வேண்டாம்னு சொல்லியிருக்கலாம்.

 

 

மேலும் உங்களுக்காக...