எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த திரைப்படத்தில் “நீ என் தங்கச்சி மாதிரி” என்று ஜெயலலிதாவை பார்த்து எம்.ஜி.ஆர் கூறும் வசனம் வரும்போது அந்த காலத்திலேயே ரசிகர்கள் வெடி சிரிப்பு சிரித்தனர். அந்த படம் தான் மாட்டுக்கார வேலன்.
மாட்டுக்கார வேலன் திரைப்படம் கடந்த 1979 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வெளியானது. பி.நீலகண்டன் இயக்கத்தில் கேவி மகாதேவன் இசையில் உருவான இந்த படத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக ஜெயலலிதா மற்றும் லட்சுமி நடித்திருந்தனர். வில்லனாக அசோகன், முக்கிய கேரக்டர்களில் விகே ராமசாமி, சோ ஆகியோர் நடித்திருந்தனர்
இந்த படம் மூன்றே மூன்று செட்டுகளில் ஒரே ஷெட்யூலில் படமாக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது. வழக்கமாக எல்லா இரட்டை வேட படங்களிலும் நடைபெறும் ஆள்மாறாட்டம் தான் இந்த படத்திலும் நடக்கும்.
கணேசனுக்கு பெரியார் கொடுத்த சிவாஜி பட்டம்….. எம்ஜிஆர் தான் காரணம்….. எப்படி தெரியுமா….?
அசோகன் மகள் லட்சுமி தோழிகளுடன் காரில் வரும்போது மாட்டுக்கார வேலனின் மாடுகள் இருக்கும். அதனால் ஆளை அனுப்பி மாடுகளை அடித்து விரட்ட சொல்லுவார். அப்போது எம்ஜிஆர் அந்த அடியாட்களை அடித்து துரத்தி விடுவார். இதனால் அசோகன், எம்ஜிஆரின் வீட்டுக்கு தீ வைத்து விடுவார். அவரை காப்பாற்றும் சோ, விகே ராமசாமியை சந்தித்து விவரம் கூற, எம்ஜிஆருக்கு அவர் அடைக்கலம் கொடுப்பார். அவரை மாட்டுக்கார வேலனில் இருந்து கோட், சூட் போட்ட நபராக விகே ராமசாமி மாற்றிவிடுவார்.
இந்த நிலையில் வக்கீலாக இன்னொரு எம்ஜிஆர் இருப்பார். அவருக்கு ஜெயலலிதாவின் போட்டோவை காட்டி திருமணம் செய்ய முடிவு செய்வார்கள். இந்த நிலையில் தான் கோட்டும் சூட்டும் போட்ட மாட்டுக்கார வேலன் ஜெயலலிதாவை சந்திப்பார். இவர்தான் தனக்கு பார்த்த மாப்பிள்ளை என்று நினைத்து ஜெயலலிதா அவரை காதலிப்பார்.
இந்த நிலையில் வக்கீல் எம்.ஜி.ஆருக்கும் லட்சுமிக்கும் இடையே காதல் இருக்கும். தற்செயலாக இந்த காதலர்களை ஜெயலலிதா பார்த்துவிட, தனக்கு எம்ஜிஆர் துரோகம் செய்துவிட்டார் என்று அவரிடம் சண்டை போடுவார். அப்போது தான் ஜெயலலிதாவிடம் விகே ராமசாமி உண்மையை கூறுவார். அப்போது எம்ஜிஆர், எனது பெயர் ரகு, நீ என்னுடைய தங்கச்சி மாதிரி, நீயும் வேலனும் சேர்ந்து வாழுங்கள் என்று கூறுவார். இந்த வசனம் திரையரங்கில் ஒலிக்கும் போது ரசிகர்களின் சிரிப்பு அடங்க பல நிமிடங்கள் ஆனது என்று கூறப்பட்டது.
சிவாஜியை விட பல மடங்கு அதிக சம்பளம் வாங்கிய எம்.ஜி.ஆர்! என்ன காரணம் தெரியுமா?
இதன் பிறகு பல்வேறு குழப்பங்கள், பல்வேறு திருப்பங்கள், இரண்டு எம்.ஜி.ஆரையும் பார்க்கும் அசோகன் அதிர்ச்சி அடைவது, விகே ராமசாமிக்கு ஒரு சிக்கல் ஏற்படும்போது அதை எம்ஜிஆர் காப்பாற்றுவது, இரண்டு நாயகிகளுடன் எம்ஜிஆர் மாறி மாறி டூயட் பாடுவது, வில்லன்களுடன் சண்டை என கதை அமோகமாக சென்று சுபமாக முடியும்.
இந்த படத்தில் நடிகை சச்சு உளவு பார்க்கும் போலீசாக நடித்திருப்பார். அவர்தான் கடைசியில் எம்ஜிஆரை காப்பாற்றும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது. இந்த படத்திற்கு கேவி மகாதேவன் இசையமைத்த பாடல்கள் மிகப்பெரிய பலம். சத்தியம் நீயே தர்ம தாயே, ஒரு பக்கம் பார்க்கிறா, பட்டிக்காடா பட்டணமா, தொட்டுக்கொள்ளவா, பூ வைத்த ஆகிய ஐந்து பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
எம்.ஜி.ஆரின் மிகச் சிறந்த மற்றும் அதிக வசூல் செய்த படங்கள் என்ற பட்டியல் எடுத்தால் கண்டிப்பாக அதில் மாட்டுக்கார வேலன் இடம்பெறும்.