சிவாஜியை விட பல மடங்கு அதிக சம்பளம் வாங்கிய எம்.ஜி.ஆர்! என்ன காரணம் தெரியுமா?

பொதுவாக தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை ஹீரோக்களுக்கு தனி மதிப்பு தான். இன்று வரை பல படங்கள் ஹீரோக்களை மையமாக வைத்து தான் வெளியாகிறது. ஹீரோக்களை கொண்டாடும் தமிழ் சினிமா அவர்களின் சம்பளத்திலும் தாராளமாக இருந்துள்ளது.

இன்றைய கால கட்டத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைவரின் சம்பளமும் 100 கோடிக்கு மேல் உள்ளது. மேலும் அடுத்தடுத்து படங்களில் தனது சம்பளத்தையும் ஏற்றி வருகின்றார்கள். இந்த நிலையில் 60, 70 காலத்தில் ஹீரோக்களின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முதல்முறையாக ஒரு லட்சம் சம்பளமாக வாங்கிய நடிகை கே.பி.சுந்திராம்பாள். ஒளவையார் திரைப்படத்திற்காக இந்த சம்பளம் அவருக்கு வழங்கப்பட்டது. அடுத்து அதிக சம்பளம் வாங்கிய நடிகர் எம்.ஆர்.ராதா அவர்கள் தான். ரத்தக்கண்ணீர் திரைப்படத்திற்காக 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது.

அடுத்தது அதிகம் சம்பளம் வாங்கியவர் காமெடி நடிகர் சந்திரபாபு அவர்கள் தான். சகோதரி திரைப்படத்தில் நடித்ததற்காக சந்திரபாபுவுக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சந்திரபாபு நடித்த சபாஷ் மீனா திரைப்படத்தில் சிவாஜி விட அதிகமான சம்பளத்தை பெற்றார் என்று பெருமையும் சந்திரபாபுவுக்கு உண்டு.

இதே போல் சிவாஜி அந்த காலத்தில் அதிகமாக வாங்கிய சம்பளம் 2 லட்சம் ரூபாய். 1967-ல் வெளியான திருவருட்செல்வர் என்ற திரைப்படத்திற்காக இந்த சம்பளம் சிவாஜி அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே எம்ஜிஆர் அவர்கள் அதிகமான சம்பளம் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1966 வெளியான அன்பே வா திரைப்படத்திற்காக மூன்று லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக எம்ஜிஆருக்கு வழங்கப்பட்டது. திருவருட்செல்வர் படத்தை தொடர்ந்து உயர்ந்த மனிதன் திரைப்படத்திற்காக சிவாஜி பெற்ற சம்பளம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

திருவருட்செல்வர் திரைப்படத்திற்கு வாங்கிய சம்பளத்தை விட உயர்ந்த மனிதன் திரைப்படத்திற்கு குறைவான சம்பளம் வழங்கப்பட்டதிற்கு காரணம் வண்ண திரைப்படத்தில் நடிக்கும் போது அதிகமான சம்பளமும், கருப்பு வெள்ளை திரைப்படத்தில் நடிக்கும் போது குறைவான சம்பவம் அந்த காலத்தில் வழங்கப்பட்டது.

அன்பே வா திரைப்படத்திற்குப் பிறகு எம்ஜிஆர் நடித்த ஒளிவிளக்கு திரைப்படத்திற்காக 5 லட்சம் சம்பளமும், பின்பு நம் நாடு திரைப்படம் நடித்ததற்காக 8 லட்சம் சம்பளமும் எம்ஜிஆருக்கு வழங்கப்பட்டது. மேலும் சிவாஜி வாங்கிய அதிகபட்ச சம்பளம் 11 லட்சம், இது ரஜினியின் படையப்பா படத்திற்கு வழங்கப்பட்டது.

சிவாஜியுடன் நடித்து எம்.ஜி.ஆருடன் நடிக்க ஆசைப்பட்ட 5 நடிகைகள்!

அதை தொடர்ந்து எம்ஜிஆர் வாங்கிய அதிகபட்ச சம்பளம் 42 லட்சம். மீனவ நண்பன் திரைப்படத்திற்காக இந்த சம்பளம் எம்ஜிஆருக்கு வழங்கப்பட்டது. அந்த காலத்தில் மற்ற நடிகர்களை விட எம்ஜிஆருக்கு அதிக சம்பளத்தொகை கொடுக்கப்பட்டதற்கான முக்கிய காரணம் எம்ஜிஆர் வைத்து படம் எடுத்தால் அதிக லாபம் பெற முடியும் என்ற நம்பிக்கைதான்.

அதேபோல் அந்த காலத்தில் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்டவரும் மக்கள் திலகம் எம்ஜிஆர் தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...