மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த தயாரித்து இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன் என்ற திரைப்படம் கடந்த 1973ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த படம் அவருடைய அரசியல் அடித்தளம் என்று கூறினால் அது மிகையாகாது.
திமுக என்ற கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கும் பல தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றதற்கும் காரணமாக இருந்தவர் எம்ஜிஆர். அண்ணாதுரை, கருணாநிதி போன்ற தலைவர்கள் இருந்தாலும் கூட்டத்தை வரவழைக்கும் திறமை எம்ஜிஆரிடம் இருந்தது. அவரது சூறாவளி பிரச்சாரம் காரணமாகவே திமுக வெற்றி பெற்றது.
புது வசந்தம் படத்திற்கு முன்னரே வந்த ஒரு காவிய திரைப்படம்.. மரபை கலைத்த ‘பாலைவன சோலை’
ஆனால் அதே நேரத்தில் திமுக அமைச்சர்கள் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்கள் என்றும், எனவே பொதுக்குழுவில் அமைச்சர்களிடம் கணக்கு கேட்க போகிறேன் என்று எம்ஜிஆர் அதிரடியாக அறிவித்ததும்தான் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.
முதலில் எம்ஜிஆர் சஸ்பெண்ட் செய்த திமுக தலைவர் கருணாநிதி, அதன் பிறகு பொதுக்குழுவை கூட்டி எம்ஜிஆரை கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக கூறினார். எம்ஜிஆர் பேரவை அனைத்தையும் மு.க.முத்து பேரவையாக மாற்றவும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக கூறப்பட்டது.
இந்த நேரத்தில் தான் எம்ஜிஆர் நடித்த ‘இதயவீணை’ என்ற திரைப்படம் வெளியானது. அந்த படத்திற்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் இருந்தது.
ஆனால் அவர் நடித்து தயாரித்து இயக்க முடிவு செய்திருந்த உலகம் சுற்றும் வாலிபன் என்ற திரைப்படத்திற்குதான் அவ்வளவு பிரச்சனைகள் வந்தது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டது.
குறிப்பாக தாய்லாந்தில் இந்த படத்தை படமாக்க ஒரு வாரம் மட்டுமே அந்நாட்டு அரசு அனுமதி அளித்திருந்தது. அப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடத்தின் அருகில் ஒரு விபத்து நடந்தது. எம்.ஜி.ஆர் மற்றும் அவரது குழுவினர் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு உடனடியாக விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்க உதவினர். பட குழுவினர்களின் இந்த உதவியை பார்த்த தாய்லாந்து அரசு நீங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் எங்கள் நாட்டில் படப்பிடிப்பு நடத்திக் கொள்ளுங்கள் என்று அனுமதி அளித்தது.
அதேபோல் ஜப்பான் நாட்டில் நடந்த எக்ஸ்போ 70 என்ற கண்காட்சியை மிகத் திறமையாக எம்.ஜி.ஆர் படமாக்க்கி இருப்பார். லட்சக்கணக்கான மக்கள் இந்த எக்ஸ்போவை பார்க்க வந்த போது அவர்களுடன் மக்களோடு மக்களாக கேமரா புகுந்து விளையாடி இருந்தது.
சந்திரலேகா, லதா, மஞ்சுளா ஆகிய மூன்று நாயகிகள், காமெடிக்கு நாகேஷ், எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை, வாலி, கண்ணதாசனின் பாடல்கள் என இந்த படத்தில் உள்ள அனைத்துமே பிளஸ்களாக இருந்தது.
அவள் ஒரு தொடர்கதை படத்தை மீண்டும் இயக்கினாரா கே.பாலசந்தர்? மனதில் உறுதி வேண்டும் பெற்ற விமர்சனம்..!
இந்த படம் ஒரு வழியாக படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ்க்கு தயாரான போதுதான் அன்றைய திமுக அரசிடம் இருந்து பல்வேறு பிரச்சனைகள் வந்தது. மதுரை மேயராக இருந்த ஒருவர் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் மட்டும் ரிலீஸ் ஆனால் நான் புடவை கட்டிக் கொள்கிறேன் என்று சவால் விடுத்தார்.
இந்த நிலையில்தான் திடீரென திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுகவிலிருந்து பிரிந்து அதிமுக என்ற தனி கட்சி ஆரம்பித்த ஒரு சில மாதங்களில் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டும், அதே நேரத்தில் தனது உலகம் சுற்றும் வாலிபன் படத்தையும் பிரச்சனை இன்றி வெளியிட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார் எம்ஜிஆர்.
ஒரு பக்கம் தேர்தல் பணிகளையும் இன்னொரு பக்கம் படத்தின் ரிலீஸ் பணிகளையும் அவர் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தேர்தல் பிரச்சாரத்தின் போதுதான் 1973 மே 11ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்தார். இந்த படத்திற்கு திரையரங்குகள் கொடுக்கக் கூடாது என வாய்மொழியாக திமுக அரசு உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டது.
படப்பெட்டிகளை கொண்டு செல்லும்போது பிரச்சனை ஏற்படும் என்று ஒவ்வொரு தியேட்டருக்கும் 10 படப்பெட்டிகளை எம்ஜிஆர் அனுப்பினார். அதில் ஒன்பது போலியானது, ஒன்றுதான் நிஜமானது. அந்த அளவுக்கு புத்திசாலித்தனமாக சிந்தித்து அவர் ஒவ்வொருத்தருக்கும் படப்பெட்டியை அனுப்பி வைத்தார்.
இந்த படம் ரிலீஸான தினத்தன்று வேண்டும் என்றே பவர் கட் செய்யப்பட்டது. பெரும்பாலான திரையரங்குகளில் ஜெனரேட்டரில் தான் இந்த படம் ஓடியது. முதல் காட்சிகளிலேயே அதிமுகவின் கொடி காட்டப்பட்டதும் அன்றைய எம்ஜிஆர் ரசிகர்களும் அதிமுக தொண்டர்களும் ஆர்ப்பரித்தனர் என்பது அந்த கால ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும்.
மேலும் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்ற பாடல் தொடக்கத்துடன் இந்த படம் ஆரம்பமாகும். தொடக்கமே அபாரமாக இருக்கும்.
இந்த படத்தில் எம்ஜிஆர் பெரிய அளவில் அரசியல் வசனம் பேசியிருக்க மாட்டார். ஒரு சில வசனங்கள் மட்டுமே இருக்கும். இந்த நிலையில்தான் திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு உலகம் சுற்றும் வாலிபன் ரிலீஸானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு திண்டுக்கல் இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றார்.
எம்.ஜி.ஆரின் அரசியலுக்கு அடித்தளமிட்டது இந்த படம் என்று கூறினால் அது மிகையாகாது. அதன் பிறகு தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. எம்ஜிஆர் இறக்கும்வரை திமுகவால் ஆட்சியை பிடிக்காமல் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் ஜெயித்த அண்ணன் – தம்பி நடிகர்கள்.. இவ்வளவு பெரிய லிஸ்ட்டா?
எம்ஜிஆர் என்ற ஒரு நடிகரை கட்சியில் இருந்து நீக்கினால் சிறு பாதிப்பு மட்டுமே ஏற்படும் என்ற கருணாநிதியின் கணக்கு தப்பாகிவிட்டது என்று கண்ணதாசன் ஒரு நூலில் எழுதியிருந்தார். அது எவ்வளவு பெரிய உண்மை என்பது எம்ஜிஆர் இறக்கும் அவர் ஆட்சிக்கட்டிலில் அமர முடியாத நிலை ஏற்பட்டதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.