புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அண்ணா திமுக என்ற கட்சியை 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கிய நிலையில், அக்டோபர் 20ஆம் தேதி அவர் நடித்த இதய வீணை என்ற திரைப்படம் வெளியானது. எம்ஜிஆர் கட்சி தொடங்கிய ஒரு சில நாட்களில் வெளியான படம் என்பதால் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
எம்.ஜி.ஆர் தன்னுடைய படங்களில் அவ்வப்போது அரசியல் கருத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக திணித்து வருவார். குறிப்பாக அவர் திமுகவில் இருந்த போதும் அதிமுக கட்சியை தொடங்கிய பின்னரும் அதை செய்து வந்தார்.
அதேபோல் தான் இதயவீணை திரைப்படத்திலும் ஒரு பாடலில் அரசியல் பேசி அண்ணா மற்றும் நேருவின் பெருமையை கூறியிருப்பார். இந்த படத்தின் கதை என்று பார்த்தால் எம்ஜிஆர் சிறுவயதில் அப்பாவிடம் அடிவாங்கி காஷ்மீருக்கு ஓடி விடுவார். அங்கு அவர் கைடாக பணிபுரிந்து கொண்டிருக்கும் நிலையில் தான் லட்சுமி மற்றும் மஞ்சுளா காஷ்மீருக்கு தனது கல்லூரி தோழிகளுடன் சுற்றுலா வருவார்கள்.
வாலி பாட்டெழுத வேண்டாம்….. எம்ஜிஆரின் கடுங்கோபம்….. என்ன காரணம் தெரியுமா…..?
இந்தநிலையில் அவர்களை சந்தித்து அவர்களுக்கு சுற்றுலா கைடாக எம்ஜிஆர் பணிபுரிவார். அப்போதுதான் லட்சுமி தன் உடன் பிறந்த தங்கை என்பதை புரிந்து கொள்வார். அவருடைய தோழியான மஞ்சுளாவை அவர் காதலிப்பார்.
இந்த நிலையில் மஞ்சுளாவுக்கு ஒரு பிரச்சனை வரும், அதேபோல் லட்சுமி சிவக்குமாரை காதலிப்பார். நம்பியார் மற்றும் மனோகர் ஆகிய இருவரும் எம்ஜிஆருக்கு அவ்வப்போது தொல்லை கொடுத்து கொண்டு இருப்பார்கள். இவை அனைத்தையும் அவர் எப்படி சமாளித்தார் என்பதுதான் இந்த படத்தின் கதை.
இந்த படத்தில் எம்ஜிஆர் தந்தையாக அவரது சகோதரர் எம் ஜி சக்கரபாணி நடித்திருந்தார். எம்ஜிஆர் ஜோடியாக மஞ்சுளா, சகோதரியாக லட்சுமி, மைத்துனராக சிவக்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். நம்பியார் மற்றும் ஆர்எஸ் மனோகர் ஆகிய இருவரும் வில்லனாக கலக்கியிருப்பார்கள்.
நாடக வாழ்க்கையை தொடர்ந்து எம்ஜிஆர் ஹீரோவாக நடித்த முதல் படம் என்ன தெரியுமா?
இந்த படத்தை கிருஷ்ணன் பஞ்சு என்ற இணைந்து இயக்கியிருந்தார்கள். சங்கர் கணேஷ் இசையமைத்த காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர், பொன்னந்தி மாலை பொழுது உட்பட இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. இந்த படம் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி வெளியாகி தமிழகத்தின் பல திரையரங்களில் சூப்பர் ஹிட் ஆனது.
அதிமுக என்ற கட்சி ஆரம்பித்த ஒரு சில நாட்களில் இந்த படம் வெளிவந்தாலும் இந்த படத்தின் கதை ஓட்டத்திற்கும் அரசியல் வாழ்விற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லாதது போல் தான் படம் இருக்கும்.
ஆங்காங்கே ஒரு சில வசனங்கள் மற்றும் காட்சிகளில் மட்டுமே எம்ஜிஆர் தனது படங்களில் அரசியலை வைத்திருந்தார் என்பதிலிருந்து தான் அவரது புத்திசாலித்தனம் தெரியும். கலை என்பது தனி, அரசியல் என்பது தனி என்பதை வேறுபடுத்தி, அரசியலை கலைக்குள் கொண்டு வரலாம், ஆனால் முழுக்க முழுக்க அரசியலாக ஒரு திரைப்படம் இருக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
அதனால் தான் அதிமுக கட்சி ஆரம்பித்த பின்னரும் கூட அவர் பெரிய அளவில் அதிமுகவை விளம்பரப்படுத்த தனது திரைப்படங்களை பயன்படுத்தவில்லை. ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில காட்சிகளை மட்டும் அவர் அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டார். இதனால் தான் அவர் அரசியலிலும் வெற்றி பெற்றார், சினிமாவில் வெற்றி பெற்றார் என்று கூறுவார்கள்.