எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது அவரிடம் அனுமதி வாங்கி சிவாஜியை வைத்து தயாரிப்பாளர் கோவைத்தம்பி ஒரு திரைப்படத்தை தயாரித்தார். அந்த படம்தான் ‘மண்ணுக்குள் வைரம்’.
‘பயணங்கள் முடிவதில்லை’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் கோவைத்தம்பி. இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தை அடுத்து அவரது தயாரிப்பில் உருவான இளமை காலங்கள், நான் பாடும் பாடல், உன்னை நான் சந்தித்தேன், உதய கீதம், இதய கோயில் ஆகிய திரைப்படங்கள் வரிசையாக சூப்பர் ஹிட்டாகியது. இந்த ஆறு படங்களின் வெற்றிக்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் என்று கூறலாம். அந்த அளவுக்கு இந்த படங்களின் பாடல்கள் சூப்பராக இருந்தது.
சிவாஜியை வைத்து எடுத்த ஒரே படம்.. இனிமேல் பெரிய நடிகர்களே வேண்டாம் என முடிவு செய்த கே.பாலசந்தர்..!
ஆனால் இதய கோவில் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு இளையராஜா மற்றும் கோவைத்தம்பி ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அதன் பின் கோவைத்தம்பி தயாரித்த திரைப்படங்களுக்கு பல்வேறு இசையமைப்பாளர்கள் இசை அமைத்தனர். குறிப்பாக பாலிவுட்டில் இருந்து அவர் லட்சுமிகாந்த் – பியாரிலால் உள்பட பல பிரபலங்களை தன்னுடைய படத்துக்கு இசையமைக்க வைத்தார். ஆனால் முதல் ஆறு படங்கள் வெற்றி பெற்ற அளவுக்கு அவருடைய அடுத்தடுத்த எந்த படமும் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில்தான் அதிமுகவின் பிரமுகராக இருந்த கோவைத்தம்பி எம்ஜிஆர் விருப்பத்துக்குரிய தொண்டராக இருந்தார். அதிமுக எம்எல்ஏவாகவும் இருந்தார்.
இந்த நிலையில் சிவாஜி கணேசனை வைத்து ஒரே ஒரு படமாவது தயாரிக்க வேண்டும் என்று அவருக்கு ஒரு ஆசை இருந்தது. அப்போதுதான் பாரதிராஜாவின் உறவினரான மனோஜ் குமார் ஒரு நல்ல கதை வைத்திருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அவரை நேரில் சென்று பார்த்து கதை கேட்டபோது இந்த கதை கண்டிப்பாக சிவாஜி கணேசனுக்கு பொருத்தமாக இருக்கும் என்ற முடிவு செய்தார்.
அப்போது சிவாஜி கணேசன் ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்த நிலையில் கோவைத்தம்பி நேராக ஹைதராபாத் சென்று அவரிடம் கதை கூறினார். கதை சிவாஜி கணேசனுக்கு பிடித்து விட்டது. கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்று கூறினார். ஆனால் அதே நேரத்தில் உங்களது தயாரிப்பில் நான் நடிக்கிறேன் என்பதை அண்ணன் எம்ஜிஆரிடம் சொல்லிவிடுங்கள் என்று கூறினார். அதற்கு கோவைத்தம்பி நான் ஏற்கனவே அண்ணன் எம்ஜிஆர் அவர்களை பார்த்து அனுமதி வாங்கிவிட்டுதான் உங்களை பார்க்க வந்திருக்கிறேன் என்று கூறினார். அவர் அனுமதி கொடுத்துவிட்டால் ஓகே எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி சிவாஜி கணேசன் அந்தப் படத்தில் நடித்தார். அந்தப் படம்தான் ‘மண்ணுக்குள் வைரம்’.
சிவாஜிக்கு ‘நவராத்திரி’.. எம்ஜிஆருக்கு ‘நவரத்தினம்’.. ஏ.பி.நாகராஜனின் 2 வித்தியாசமான படங்கள்..!
சிவாஜி கணேசன் ஜோடியாக சுஜாதா நடித்த இந்த படத்தில் ராஜேஷ், முரளி, வினுசக்கரவர்த்தி, கவுண்டமணி, செந்தில், காந்திமதி, கோவை சரளா, பாண்டியன், வாணி விஸ்வநாத், ரஞ்சனி உள்பட பலர் நடித்தனர். இந்த படத்தின் மூலம்தான் தேவேந்திரன் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தில் அவர் கம்போஸ் செய்த ஆறு பாடல்களுமே நல்ல ஹிட் ஆனது. குறிப்பாக, மலேசியா வாசுதேவன் பாடிய ‘கிழக்கு வெளுத்திருச்சு கீழ்வானம் சிவந்திருச்சு’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது.
மண்ணுக்குள் வைரம் திரைப்படம் கடந்த 1986ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்த காரணத்தினால் மிகப்பெரிய வெற்றியடையவில்லை என்றாலும் தனக்கு நஷ்டம் இல்லை என்று கோவைத்தம்பி தெரிவித்திருந்தார். இந்த படம் சில திரையரங்குகளில் 75 நாட்களும் சில திரையரங்குகளில் 50 நாட்களும் ஓடியது.
பட்ஜெட்டை விட 800 மடங்கு லாபம்.. எம்ஜிஆர் இயக்கிய முதல் திரைப்படம்..! என்ன படம் தெரியுமா?
இந்த படத்தால் எனக்கு பெரிய லாபம் இல்லை என்றாலும் சிவாஜி கணேசன் நடித்த ஒரு படம் எடுத்து விட்டேன் என்ற திருப்தி எனக்கு இருந்தது என்று கோவைத்தம்பி பல பேட்டிகளில் கூறியுள்ளார். அந்த வகையில் எம்ஜிஆரிடம் அனுமதி வாங்கி சிவாஜி கணேசன் படம் எடுத்த கோவைத்தம்பி அந்த படத்தில் பெரிய லாபம் பார்க்கவில்லை என்றாலும் மனதிருப்தியுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.