சிவாஜியை வைத்து எடுத்த ஒரே படம்.. இனிமேல் பெரிய நடிகர்களே வேண்டாம் என முடிவு செய்த கே.பாலசந்தர்..!

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் பல பிரபல நடிகர்களை வைத்து படம் எடுத்திருந்தாலும் சிவாஜியை வைத்து அவர் ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே இயக்கினார். ஆனால் அந்த திரைப்படத்திலும் சிவாஜியை நல்லவராக காண்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் அவருக்கு இருந்ததால் பல சமரசங்கள் செய்து கொண்டார். அதனால் அந்த படம் தோல்வியடைந்தது.

அந்த படத்தை மட்டும் அவர் புது முகத்தை வைத்து எடுத்திருந்தால் அது பாலச்சந்தர் படம் என்று போற்றப்பட்டிருக்கும், படமும் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் சிவாஜியை வைத்து எடுத்ததால் அவருடைய இமேஜ் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக சமரசம் செய்து எடுத்தேன், அதனால் அந்த படம் தோல்வி அடைந்தது என்று பாலச்சந்தர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த படம் தான் ‘எதிரொலி’.

சிவாஜிக்கு ‘நவராத்திரி’.. எம்ஜிஆருக்கு ‘நவரத்தினம்’.. ஏ.பி.நாகராஜனின் 2 வித்தியாசமான படங்கள்..!

balachandar2

கடந்த 1970ஆம் ஆண்டு வெளியான இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் வசூலில் திருப்தி தரவில்லை. சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிவக்குமார், லட்சுமி, மேஜர் சுந்தரராஜன், டி.எஸ்.பாலையா, நாகேஷ் என இந்த படத்தில் ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டமே நடித்திருந்தது.

இந்த படத்தின் கதைப்படி சிவாஜி வழக்கறிஞராக இருப்பார். அவர் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ரயிலில் செல்லும்போது அவருக்கு ஒரு பணப்பெட்டி கிடைக்கும். அந்த நேரத்தில் அவருக்கு பணம் தேவை என்பதால் அந்த பணத்தை அவர் பயன்படுத்திக் கொள்வார்.

இதனால் அவருடைய மனசாட்சி கொன்று கொண்டிருக்கும் நிலையில் தான் மேஜர் சுந்தரராஜன் அவரை பணப்பெட்டியை வைத்து மிரட்டிக் கொண்டு இருப்பார். ஒரு கட்டத்தில் மேஜர் சுந்தர்ராஜன் இறந்த விட, அவரை சிவாஜிதான் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்படும். இந்த நிலையில் கிளைமாக்ஸில் ஒரு திருப்பமாக ஒரு குழந்தை சொல்லும் சாட்சியால் சிவாஜி விடுதலையாகி கொலை குற்றத்திலிருந்து தப்பி விடுவார் என்பது போன்று கதை முடிக்கப்பட்டிருக்கும்.

ரஜினி படத்தை இயக்க மறுத்த எஸ்பி முத்துராமன்.. சமரசம் செய்த பாலசந்தர்.. ‘ஸ்ரீராகவேந்திரர்’ உருவான கதை..!

ethiroli

இந்த படம் குறித்து கே.பாலச்சந்தர் பேட்டியில் கூறிய போது, ‘எதிரொலி படத்தை பொருத்தவரை அந்த கதை சிவாஜிக்கு பிடித்திருந்தது, திரைக்கதையையும் அவர் ரொம்ப ரசித்தார். எனவே தான் அந்த படத்தை நான் எடுத்தேன். சிவாஜி கணேசன் அப்போது ஒரு மிகப்பெரிய இமேஜ் உள்ள நடிகராக இருந்ததால் அவர் தவறு செய்து விட்டார் என்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற பயம் எனக்கு இருந்தது. அந்த பயம் படம் வந்தபின்னர் உண்மையானது.

ஒருவேளை இந்த படத்தை நான் ஒரு புது முகத்தை வைத்து எடுத்து இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும். அப்படி எடுத்திருந்தால் அது பாலச்சந்தர் படமாகவும் இருந்திருக்கும். ஆனால் இந்த படம் சிவாஜி படம் ஆகிவிட்டது. இந்த படத்தின் தோல்விக்கு காரணம் அவருடைய இமேஜ் தான். இந்த படத்திற்கு பிறகு தான் பெரிய நடிகர்களை வைத்து இனிமேல் படம் எடுக்க கூடாது என்ற முடிவை எடுத்தேன்.’ என்று கூறியிருந்தார்.

ethiroli1

மேலும், ‘ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர்களைகூட ஒரு கட்டத்திற்கு மேல் நான் இயக்கவில்லை. ரஜினியை வைத்து படம் இயக்கினால் ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பது எனக்கு தெரியும். அந்த எதிர்பார்ப்பை என்னால் பூர்த்தி செய்ய முடியாது. அதனால்தான் கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.பி.முத்துராமன் ஆகியவர்களை வைத்து ரஜினி படத்தை தயாரித்தேன். கமல்ஹாசனையும் ஒரு கட்டத்திற்கு மேல் நான் பயன்படுத்தவில்லை. இமேஜ் உள்ள நடிகர்களை பயன்படுத்தினால் நான் என்ன சொல்ல வந்தேனோ அதை என்னால் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிடும்’ என்று கூறியிருந்தார்.

பாதியில் நின்ற சிவாஜி படம்.. எம்ஜிஆர் படத்தை எடுத்து அதில் கிடைத்த லாபத்தில் மீண்டும் தொடக்கம்..

‘சிவாஜி கணேசன் உடன் நான் பணிபுரிந்த ஒரே படம் இதுதான், இருப்பினும் இந்த படம் தோல்வி அடைந்தாலும் இந்த படத்தை நான் ரசித்து ரசித்து எடுத்தேன் என்றும் ஒருவேளை நேரம் இருந்தால் இந்த படத்தை மீண்டும் வேறு ஒரு நடிகரை வைத்து இயக்குவேன்’ என்றும் பாலச்சந்தர் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...