யார் இந்த ‘ஜெயிலர்’ விநாயகன்? இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா? ரஜினி சொன்ன அந்த பிரபலம் யார் தெரியுமா?

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் முதல் நாளே உலகம் முழுவதும் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு குவிந்து கொண்டிருக்கும் பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக இந்த படம் மிகப்பெரிய வசூலை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினிகாந்தை வித்தியாசமாக காண்பித்த நெல்சனுக்கும் பாராட்டு குவிந்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் ரஜினிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ, கிட்டத்தட்ட அதே அளவுக்கு வில்லனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கேரக்டரை நெல்சன் அமைத்திருந்தார்.

இளையராஜா பின்னணி இசை செய்ய மறுத்த ரஜினி படம்.. ஏவிஎம் செய்த புத்திசாலித்தனமான செயல்..!

vinayagan4

விநாயகன் கேரக்டர் இந்த அளவுக்கு பவர்ஃபுல்லாக இருக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தனக்கு கிடைத்த வாய்ப்பை விநாயகனும் இந்த படத்தில் சிறப்பாக பயன்படுத்தி, ரஜினியையும் மிரட்டும் அளவுக்கு தூள் கிளப்பி இருந்தார் என்பது படம் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

விநாயகன் யார்? இதற்கு முன் அவர் எந்தெந்த தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்? ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் விநாயகனின் கேரக்டரில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருந்ததாக ரஜினிகாந்த் சொன்னாரே? அந்த நடிகர் யார் என்பதை எல்லாம் தற்போது பார்ப்போம்.

நடிகர் விநாயகன் கேரளாவை சேர்ந்தவர். சிறுவயதிலேயே அவர் மிகவும் கஷ்டமான குடும்பத்தில் பிறந்து வாழ்ந்தவர். வில்லனாக மிரட்டும் அவர் ஒரு நல்ல டான்ஸர் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. பிளாக் மெர்குரி என்ற பெயரில் அவர் ஒரு டான்ஸ் குழுவை நடத்தி வந்தார்.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக ரசிகர்கள் மனதில் இருக்கும் ‘பாட்ஷா’: இனிமேல் இப்படி ஒரு படம் வருமா?

இந்த நிலையில் தான் சினிமாவில் சேர வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. முதன்முதலாக அவர் மோகன்லால் நடித்த ஒரு மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே யார் இந்த நடிகர் என்று பேச வைக்கும் அளவுக்கு அவரது கேரக்டர் இருந்தது. ஆனால் அதனை அடுத்து அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை, அவரும் பெரிதாக முயற்சியும் செய்யவில்லை. தனது நடன குழுவிலேயே கவனம் செலுத்தி இருந்தார்.

vinayakan2 1

இந்த நிலையில்தான் மீண்டும் அவருக்கு ஆறு ஆண்டுகள் கழித்து 2001ஆம் ஆண்டு ஒரு மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு அவரது நடிப்பை பார்த்து பல படங்கள் வரிசையாக கிடைத்தது. தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே அவர் நடிக்க ஒப்புக் கொள்வார் என்பதால் இவர் பல படங்களை இழந்ததாகவும் கூறப்பட்டது.

இவர் தமிழில் முதலில் அறிமுகமானது ‘திமிரு’ படத்தில்தான். விஷால் நடித்த இந்த படத்தில் ஸ்ரேயா ரெட்டிக்கு அடியாளாக நடித்திருப்பார். விஷாலையே மிரட்டும் அளவுக்கு இவரது நடிப்பு இந்த படத்தில் இருக்கும்.

அதன் பிறகு சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’ மற்றும் ‘காளை’ ஆகிய இரு படங்களில் தொடர்ச்சியாக நடித்த விநாயகன், கார்த்தியின் ‘சிறுத்தை’ படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் விநாயகனுக்கு பெயர் வாங்கி கொடுத்த படம் என்றால் அது தனுஷின் ‘மரியான்’ தான். இந்த படத்தின் விநாயகன் கேரக்டர் ரசிகர்கள் மனதில் இன்னும் இருக்கும்.

இந்த நிலையில்தான் தற்போது அவர் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

‘ஜெயிலர்’ திரைப்படத்தில் விநாயகன் வந்ததே ஒரு சுவாரசியமான கதை. சமீபத்தில் நடந்த ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் வில்லன் கேரக்டரில் நடிக்க ஒரு மிகப்பெரிய நடிகரை ஏற்பாடு செய்திருந்தோம் என்றும் ஆனால் அதன்பிறகு தாங்களே அந்த நடிகர் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டதாகவும் ரஜினி கூறியிருந்தார். அந்த மிகப்பெரிய நடிகர் யார் என்றால் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தான்.

vinayakan1

ஆனால் அதன்பின்னர் வில்லன் கேரக்டரை மிதிக்க வேண்டிய காட்சி எல்லாம் வருகிறது என்பதால்தான் மம்முட்டியை மிதிக்கும் காட்சி இருந்தால் அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் சேர்ந்து முடிவு செய்து அவரை நடிக்க வைக்கவில்லை என்று கூறப்பட்டது.

ஒருவேளை மம்முட்டி இந்த படத்தில் நடித்திருந்தால் ‘தளபதி 2’ படமாக இருந்திருக்கும். மம்முட்டியின் கேரக்டர் இன்னும் சிறிது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மிரட்டலாக இருந்திருக்கும்.

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் வில்லன் கேரக்டருக்கு பல நடிகர்கள் பரிசீலனையில் இருந்தபோது தான் விநாயகன் பேட்டியை தொலைக்காட்சியில் பார்த்ததாகவும், அவரது மலையாளம் கலந்த தமிழ் பேச்சைக் கேட்டு இந்த படத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தேன் என்றும் நெல்சன் கூறியிருந்தார்.

விநாயகனிடம் சென்று ‘ஜெயிலர்’ படத்தில் மெயின் வில்லனாக நடிக்க வேண்டும் என்று கேட்டபோது ரஜினி படம் என்றால் நான் சின்ன வேடத்தில் கூட நடிக்க தயார் என்று கூறியதாகவும் நெல்சன் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

20 வருடங்களுக்கும் மேல் மோதிய கமல் – ரஜினி படங்கள்.. மாறி மாறி கிடைத்த வெற்றி..!

இதேபோல் தான் விரைவில் வரவிருக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் அவரது கேரக்டர் வலிமையானது என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் விநாயகன் இன்னும் சில ஆண்டுகளுக்கு தமிழ் திரை உலகில் வில்லன் பஞ்சத்தை தீர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...