எஸ்.ஏ. சந்திரசேகருக்கு ரிவஞ்ச் கொடுத்த எம்.ஜி.ஆர்.. One more கேட்டதால் வந்த வினை

By John A

Published:

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் சினிமா மட்டுமின்றி அரசியலிலும் தமிழகத்தின் ஒரு மிகப் பெரிய ஆளுமையாகத் திகழ்ந்தார். நாடகத்தில் இருந்து சினிமாத் துறைக்கு வந்ததால் நடிப்பு, கேமிரா, இயக்கம், திரைக்கதை, கதை, தயாரிப்பு என அனைத்தையும் அவரே பார்ப்பார். மேலும் திரைப்படங்களிலும் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்தவாறு காட்சிகளையும், கதாபாத்திரங்களையும் அமைத்துக் கொள்வார் என்று கதவல் உண்டு.

ஏனெனில் இந்த ஆளுமை தான் அவரது பிற்கால அரசியல் தலைமைக்கு ஓர் சிறந்த அனுபவமாக இருந்தது. இவ்வாறு சினிமா, அரசியல் என இரண்டு துறைகளிலும் தனது ஆளுமையை நிரூபித்த எம்.ஜி.ஆர். தனக்கு வேண்டாதவர்களையும் எப்படி ஒதுக்கினார் என்பது பற்றிய பல சம்பவங்களும் உண்டு என்பார்கள். இப்படியாக இயக்குநர் தளபதி விஜய்யின் தந்தையான இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரை ஒரு படத்தில் ஒதுக்கியிருக்கிறார்.

ஒரே பாட்டில் ஓவர் நைட்டில் ஹிட்டான டான்ஸ் மாஸ்டர்.. தமிழக வீடுகளின் நீங்காமல் ஒலித்த மெட்டி ஒலி

எம்.ஜி.ஆர், லதா நடிப்பில் 1975-ல் வெளியான படம் தான் நாளை நமதே. இயக்குநர் சேதுமாதவன் இந்தப் படத்தினை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சேதுமாதவனிடம் உதவி இயக்குநராக எஸ்.ஏ.சந்திரசேகர் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒருமுறை ஒரு பாடல் காட்சிக்கான ஷுட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எம்.ஜி.ஆரும், லதாவும் இணைந்து ஆடும் காட்சியில் எம்.ஜி.ஆரின் உதட்டசைவு சற்று பொருத்தமில்லாமல் போக, அப்போது எஸ்.ஏ. சந்திரசேகர் உடனே One More என்று கேட்டிருக்கிறார்.

உடனே எம்.ஜி.ஆர் சந்திரசேகரை ஏற, இறங்கப் பார்த்துவிட்டு மீண்டும் நடித்துக் கொடுத்தார். அன்றைய தினம் ஷுட்டிங் நடந்து முடிந்தது. பின்னர் அவரைத் தோளில் கை போட்டு நீ பெரிய இயக்குநராக வருவாய் என்று வாழ்த்தி விட்டுச் சென்றார். மறுநாள் வழக்கம் போல் படப்பிடிப்புக்குக் காத்திருந்த எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அன்றைய தினம் கார் வரவில்லை.

எனவே அவர் ஆட்டோ பிடித்துக் கொண்டு வாஹினி ஸ்டுடியோ ஷுட்டிங் ஸ்பாட் போயிருக்கிறார். அங்கு அவரை உள்ளே நுழையவிடவில்லை. அப்போது இயக்குநர் சேதுமாதவன் எஸ்.ஏ. சந்திரசேகரை தோளில் தட்டிக் கொடுத்து அடுத்தபடம் வேலை செய்து கொள்ளலாம். இந்தப் படத்தில் வேண்டாம் என அவரை அனுப்பியிருக்கிறார்.

தன்னிடம் One More என்றுகேட்டதற்காக எம்.ஜி.ஆர். அந்தப் படத்திலேயே இவரை வேலை செய்ய அனுமதிக்காதது குறித்து விருது நிகழ்ச்சி ஒன்றில் சந்திரசேகர் பகிர்ந்திருக்கிறார்.