ஒரே பாட்டில் ஓவர் நைட்டில் ஹிட்டான டான்ஸ் மாஸ்டர்.. தமிழக வீடுகளின் நீங்காமல் ஒலித்த மெட்டி ஒலி

தமிழ் சினிமாவில் எத்தனையோ டான்ஸ் மாஸ்டர்கள் இருக்கின்றனர். அதில் பெண் டான்ஸ் மாஸ்டர்கள் என்றால் சில குறிப்பிட்டவர்களைத்தா நினைவில் இருக்கும். அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜியை ஆட்டுவித்தவர் புலியூர் சரோஜா என்ற நடனஇயக்குநர். 90களின் காலகட்டங்களில் கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டர் போன்ற பெண் நடன இயக்குநர்கள் ரஜினி, கமல், விஜய், அஜீத் உள்ளிடோரை ஆட வைத்தனர்.

ஆனால் ஆண் நடன இயக்குநர்களைப் பொறுத்தவரை சுந்தரம் மாஸ்டர், பிரபுதேவா, ராஜுசுந்தரம், தருண் மாஸ்டர், ராகவா லாரன்ஸ், தினேஷ், பாபா மாஸ்டர், கல்யாண் என தற்போது சாண்டி மாஸ்டர் வரை பட்டையக் கிளப்பிவருகின்றனர்.

இப்படி ஆண், பெண் என புகழ்பெற்ற நடன இயக்குநர்கள் இருந்தும் அறியப்படாத நடன இயக்குநராக கூட்டத்தில் நடனமாகிக் கொண்டிருந்தவர் ஒரே ஒரு பாடல் மூலம் இன்று உச்சத்தில் இருக்கிறார். அவர்தான் சாந்தி மாஸ்டர். தனது பத்து வயதில் தருண் மாஸ்டரிடம் நடனம் பயில ஆரம்பித்தவர் கிழக்கு வாசல் படத்தில் முதன் முறையாக குழந்தையாக நடனம் ஆடியிருப்பார். அதன்பின் சரியாக கவனிக்கப்படாமல் கூட்டத்தில் நடனமாகிக் கொண்டிருந்தார். அவருக்குச் சரியான வாய்ப்புகள் அமையாமல் இருந்தது.

ஒருமுறை நினைவிருக்கும் வரை படத்தில் திருப்பதி.. ஏழுமலை.. வெங்கடேசா பாடலில் பிரபுதேவாவுடன் ஆடிக் கொண்டிருந்தவரை கவனித்த பிரபுதேவா அவரை முன்வரிசையில் நிறுத்தி ஆடச் சொல்லியிருக்கிறார். இந்தப் பாடல் மூலம் கவனிக்க வைத்தவர் தொடர்ந்து பத்ரி படத்தில் விஜய்யுடன் இணைந்து ஆடியிருப்பார்.

அஜீத்தின் கண்ணாடியை எடுத்துக் கொண்ட சூரியின் மகன்.. வேதாளம் ஷுட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்

இப்படி ஒவ்வொரு பாடலாக முன்னிலையில் வர மின்னலே படத்தில் மாதவனுடன் வெண்மதியே.. பாடலில் ஆடி கவனம் பெற்றார். இதனைத் தொடர்ந்து மெட்டி ஒலி சீரியல் டைட்டில் பாடலுக்கு நடனம் அமைக்கும் வாய்ப்பு வரவே அந்த சீரியலில் அம்மி.. அம்மி.. அம்மி மிதித்து.. அருந்ததி முகம் பார்த்து என அவர் ஆடும் அந்த நடனத்திற்கு மயங்காத பெண்களே இல்லை.

இந்த ஒரு சீரியல் பாடல் இவர் திரையில் நடனமாடி புகழ் பெற்றதை விட ஓவர் நைட்டில் அவரை உச்சத்திற்குக் கொண்டு சேர்த்தது. நடனக் கலைஞர் சாந்தி மாஸ்டராக உருவெடுத்தார். மேலும் தொடர்ந்து சீரியல் வாய்ப்பு வரவே சன் டிவி, ஜீ தமிழ், ஸ்டார் விஜய், கலைஞர் டிவிகளில் ஒளிபரப்பாகும் பல புகழ்பெற்ற சீரியல்களில் நடிக்கவும் ஆரம்பித்தார். இப்படி தொடர்ந்து தனது திரை வாழ்க்கையை மேம்படுத்தியவருக்கு முதல் அடையாளமாக மெட்டி ஒலி டைட்டில் பாடல் திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...