தமிழ்த்திரை உலகில் எம்ஜிஆர், சிவாஜி இருவரும் பெரிய லெஜண்ட்கள். இருவரும் பெரிய ஆளுமைகளாக இருந்தனர். அவர்களது படங்கள் சக்கை போடு போட்டன. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
காலத்தால் அழியாத காவியப் பாடல்கள், தத்துவப்பாடல்கள் அவர்களது படங்களில் இடம்பெற்றன. எம்ஜிஆர், சிவாஜி இருவரும் கடைசி வரை யாருக்கு நன்றியோடு இருந்தனர் என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இப்படி பதில் சொல்லி இருக்கிறார்.
தான் சினிமாவில் அறிமுகமாவதற்கு காரணமாக இருந்த நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் மீது மிகுந்த அன்பும், நன்றியும், மரியாதையும் வைத்து இருந்தவர் தான் சிவாஜி. பெருமாள் முதலியார் இறக்கின்ற வரையில் ஒவ்வொரு பொங்கல் தினத்தன்றும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுவதை வழக்கமாக வைத்து இருந்தவர் சிவாஜி.
கதாநாயகனாக நடிப்பதற்கு முன்னால் எம்ஜிஆர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி தான் தமிழ்சினிமா உலகில் அவருக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. அந்தப் படத்தை இயக்கிய ஏஎஸ்ஏ.சாமியோடு மிகுந்த மரியாதையோடு இருந்தவர் எம்ஜிஆர்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



