இன்று ஓடிடியில் வெளியாகும் மாவீரன் திரைப்படம்! தட்டு தடுமாறி வந்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Published:

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் அதிதி சங்கர், இயக்குனர் மிஷ்கின், புஷ்பா பட வில்லன் சுனில், நகைச்சுவை நடிகர் யோகி பாபு, குக் வித் கோமாளி பிரபலம் மோனிஷா, முன்னணி நடிகை சரிதா என பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் கடந்த மாதம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் முதல் நாளில் வெளிநாடுகளில் விஜய் நடித்த வாரிசு படத்தின் வசூல் சாதனையை மாவீரன் திரைப்படம் முறியடித்துள்ளது.

அதை தொடர்ந்து இந்த திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் 50 கோடி வசூலையும், இரண்டாவது வாரத்தில் 75 கோடி வசூலையும் எட்டியுள்ளது. மேலும் மாவீரன் படம் இன்று OTT இல் வெளியாக உள்ளது.

4 கோடி மதிப்புள்ள லக்சூரி காரை ஓட்டும் ரஜினிகாந்த்! சும்மா ஸ்டைலான வீடியோ..

மேலும் மாவீரன் திரைப்படம் தற்பொழுது வரை 89 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வமான தகவலின் படி மாவீரன் திரைப்படம் அடுத்தடுத்து சில நாளில் 100 கோடியே தொட்டு விடும் என நம்பப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் நடிப்பில் இறுதியில் வெளியான பிரின்ஸ் படத்தை விட மாவீரன் திரைப்படம், நன்றாக இருந்தாலும் ரொம்பவே தட்டு தடுமாறி தான் 100 கோடியை தொட முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

மேலும் உங்களுக்காக...