4 கோடி மதிப்புள்ள லக்சூரி காரை ஓட்டும் ரஜினிகாந்த்! சும்மா ஸ்டைலான வீடியோ..

தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான முன்னணி உச்ச நட்சத்திரம் தான் நடிகர் ரஜினி காந்த். நெல்சன் இயக்கத்தில் இவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் நேற்று உலகெங்கிலும் மாஸாக வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையில் அனல் பறக்கும் ரஜினியை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த கொண்டாட்டத்திற்கு மத்தியில் தற்பொழுது ரஜினி இமயமலை சென்றுள்ளார். 4 வருடத்திற்கு பிறகு அவர் இமயமலை ஆன்மிகப் பயணம் மேற்க்கொண்டுள்ளார். நாட்டின் பணக்கார நடிகர்களில் ரஜினிகாந்தும் ஒருவர் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இவர் மற்ற நடிகர்களைப் போலில்லாமல், மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ விரும்புபவர்.

இந்நிலையில் ரஜினி அடிக்கடி டொயோட்டா, இன்னோவா போன்ற இயல்பான கார்களை தான் அதிகமாக பயன்படுத்துவதை பார்த்திருப்போம். ஆனால் தற்பொழுது ரஜினி மிகவும் விலை உயர்ந்த காரை ஓட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சூப்பர் ஸ்டார் லம்போர்கினி உருஸ் சூப்பர் எஸ்யூவியை ஓட்டுவதைக் காணலாம்.

இந்த வீடியோ உண்மையில் மூன்று ஆண்டுகள் பழமையானது. கொரோனா தொற்றுநோய் பாதிப்பு போது வீடியோ எடுக்கப்பட்டுள்ளதால் ரஜினிகாந்த் படத்தில் முகமூடி அணிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் லம்போர்கினி உருஸ் வெறும் 3.6 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தையும், 0 முதல் 200 கிமீ வேகத்தை 12.8 வினாடிகளிலும் எட்டிவிடும் வேகம் கொண்டது. புத்தம் புதிய லம்போர்கினி உருஸின் ஆரம்ப விலை ரூ. 4.18 கோடி (எக்ஸ்-ஷோரூம்), இதன் விலை வாடிக்கையாளர் கஸ்டமைசேஷன்களின் அடிப்படையில் ரூ.4.22 கோடியாக (எக்ஸ்-ஷோரூம்) உயரக்கூடும்.

தீண்டாமைலா ஒன்னும் கிடையாது… அவரு என்னோட பிரண்டு தான்! உண்மையை உடைத்த யோகிபாபு!

இந்த காரை ரஜினி சொந்தமாக வாங்கியதாக இந்த விபரமும் குறிப்பிடப்படவில்லை, ஆனால் இந்த காரை ரஜினி அவர் ஸ்டைலில் மாஸாக ஒட்டி வருகின்றார். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...