மாவீரன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

By Velmurugan

Published:

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மாவீரன் திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நேற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகியுள்ளது. சாந்தி டாக்கீஸ் தயாரித்துள்ள ‘மாவீரன்’ ஆக்‌ஷன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் படத்தில் மிஷ்கின், சுனில், மோனிஷா பிளெஸ்ஸி, யோகி பாபு, சரிதா மற்றும் பலர் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை மடோன் அஷ்வின் எழுதி இயக்கியுள்ளார். பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் தமிழ் பதிப்பில் நடிகர் விஜய் சேதுபதி படம் முழுக்க வாய்ஸ் ஓவர் கொடுத்தது படத்தின் வெற்றிக்கு ஒரு பக்க பலமாக அமைந்துள்ளது. அதிதி ஷங்கர் இப்படத்தில் பத்திரிகையாளராக நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் அம்மாவாக பழம்பெரும் நடிகை சரிதா இந்தப்படத்தில் கம்பேக் கொடுத்தது ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. சமீபத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான டான் மற்றும் டாக்டர் படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் அதை தொடர்ந்தது வெளியான பிரின்ஸ் திரைப்படம் வசூலில் சாதனை படைக்க தவறியது.

கேமியோ ரோலில் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்ட நயன்தாரா! படங்களின் லிஸ்ட் இதோ!

இந்நிலையில் தற்பொழுது திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விபரம் இணையத்தில் கசிந்துள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படம் முதல் நாளில் 8 முதல் 9 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்த மாவீரன் வரும் நாட்களில் நல்ல வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...