கேமியோ ரோலில் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்ட நயன்தாரா! படங்களின் லிஸ்ட் இதோ!

நடிகை நயன்தாரா இந்திய திரையுலகின் முக்கியமான மற்றும் வெற்றிகரமான நடிகைகளில் ஒருவர். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்துள்ளார்.

தமிழில் ‘ஐயா’ படத்தின் மூலம் அறிமுகமாகி, கோலிவுட்டில் தனது பயணத்தை தொடரும் அளவிற்கு சினிமா திரையில் வளர்த்துள்ளார். நயன்தாரா, பல படங்களின் பாடல் காட்சிகளில் கேமியோவிலும் தோன்றியுள்ளார். நயன்தாரா கேமியோவாக தோன்றிய கலக்கலான குத்தாட்டம் போட்ட பாடல்களின் பட்டியல் இதோ.

சிவாஜி

ஷங்கர் இயக்கத்தில்,  ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரியா சரண் முக்கிய வேடங்களில் நடித்த திரைப்படம் சிவாஜி. இந்தப் படம் 2007 இல் வெளியானது மற்றும் நடிகை நயன்தாரா பாலே இலக்கா என்ற பாடல் காட்சியில் கேமியோவாக தோன்றினார். அவர் ரஜினிகாந்துடன் இணைந்து நடனமாடியிருப்பார், இது படத்தின் அறிமுகப் பாடலாகும். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்.

எதிர்நீச்சல்

ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த படம் எதிர்நீச்சல். இந்த திரைப்படம் 2013 இல் வெளியிடப்பட்டது மற்றும் பாடலைப் பாடிய தனுஷுடன் லோக்கல் பாய்ஸ் என்ற பாடல் காட்சியில் நயன்தாரா நடனமாடியிருப்பார். அனிருத் இசையமைத்த லோக்கல் பாய்ஸ் பாடலை தனுஷ் மற்றும் வேல்முருகன் பாடியுள்ளனர்.

பிக்பாஸ் – 7 நிகழ்ச்சிக்காக கமல் வாங்க போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சிவகாசி

பேரரசு இயக்கத்தில் விஜய், அசின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் சிவகாசி. இந்த திரைப்படம் 2005 இல் வெளியிடப்பட்டது மற்றும் படத்தில் ஒரு நாட்டுப்புற பாடலாக கோடம்பாக்கம் ஏரியா என்னும் பாடல் இருந்தது, இந்த பாடல் காட்சிக்காக நயன்தாரா தோன்றி கலக்கியிருப்பார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த இந்தப் பாடலை திப்புவும் சுசித்ராவும் பாடியுள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...