மலையாள மர்லின் மன்றோ என பெயர் எடுத்த நடிகை.. 21 வயதில் விபரீத முடிவெடுத்து மறைந்த பரிதாபம்.. இன்னும் அது மர்மம் தான்..

Published:

மார்லின் மன்றோ என்ற பெயரைக் கேட்டாலே உடனடியாக பிரபல ஹாலிவுட் நடிகை வெள்ளை உடையுடன் கவர்ச்சியும், புன்னகையும் கலந்து சிரித்த முகத்துடன் நிற்பது தான் பலருக்கும் நினைவு வரும். இதனிடையே, கேரளா திரையுலகில் மலையாள மார்லின் மன்றோ என பெயர் எடுத்த நடிகையை பற்றி தற்போது காணலாம்.

மலையாள மர்லின் மன்றோ என போற்றப்பட்ட நடிகையான வித்யா ஸ்ரீ, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்தவர். கடந்த 1953 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்த இவர், சிறுவயதிலேயே நடிப்பில் ஆர்வம் காட்ட அதற்கான வாய்ப்பையும் பெற்றுக் கொண்டார். இவர் முதன்முதலாக மலையாள திரைப்படத்தில் தான் கடந்த 1974 ஆம் ஆண்டு நடித்தார். அதன் பிறகு ஏராளமான மலையாள படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

நடிகை வித்யா ஸ்ரீ அழகை பாராட்டாதவர்களே இருக்க முடியாது என்ற அளவுக்கு அவரது அழகு இருந்தது. இவரை பல நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என திரையுலகில் பிரபலங்கள் பலரும் பாராட்டி உள்ளனர். நடிகை வித்யா ஸ்ரீ மலையாள மர்லின் மன்றோ என்றும் நாங்கள் இதுவரை பார்த்த பெண்களில் இவரை போல் ஒரு அழகியை பார்த்ததில்லை என்றும் பலர் ஒரு காலத்தில் புகழாரம் சூட்டி இருந்தனர்.

இந்த நிலையில் தமிழில் இவர் கடந்த 1966 ஆம் ஆண்டு சித்தி என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு ரவிச்சந்திரன் நடித்த அதே கண்கள், நான் போன்ற படங்களில் நடித்தார். குலவிளக்கு, நாளும் தெரிந்தவன், நீயும் நானும் போன்ற படங்களில் நடித்த அவர் சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்த தெய்வமகன் என்ற திரைப்படத்தில் ஜூலி என்ற கேரக்டரில் நடித்திருப்பார்.

vidhyasri1

இதனை அடுத்து தாலாட்டு, நிலவே நீ சாட்சி, தேடி வந்த மாப்பிள்ளை, பாபு, கனி முத்து பாப்பா, நான் மறுபிறவி, அக்கரைப்பச்சை போன்ற படங்களில் நடித்தார். 1974 ஆம் ஆண்டு வெளியான அக்கரை பச்சை திரைப்படம் தான் இவரது நடிப்பில் உருவான கடைசி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிசியாகவும் பரபரப்பாகவும் நடித்துக் கொண்டிருந்த நடிகை வித்யா ஸ்ரீ, திடீரென 21 வயதில் பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது இன்னும் புரியாத புதிர்.

அவர் மிகவும் துரதிஷ்டசாலி என்றும் திரையுலகில் அவர் உச்சத்துக்கு செல்ல வேண்டியவர் பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டார் என்றும் பல திரையுலக பிரபலங்கள் அவரது மறைவு குறித்து கருத்து தெரிவித்தனர்.

நடிகை வித்யாஸ்ரீக்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு பிரியம். அவர் படப்பிடிப்பின் போது எங்கு குழந்தைகளை பார்த்தாலும் உடனடியாக அவர்களுக்கு சாக்லேட் மற்றும் விளையாட்டு பொருட்களை கொடுத்து மகிழ்ச்சிக்குள்ளாவார் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உங்களுக்காக...