சிங்கிள் பேரண்ட் கஷ்டங்களை உணர்த்திய எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி.. நதியாவுக்கு கிடைத்த கம்பேக்

Published:

தென்னிந்திய சினிமாக்களில் பிரபல எடிட்டராகப் பணிபுரிந்த மோகன் அவர்களின் புதல்வர்களான ரவி மற்றும் ராஜா தனது தந்தையின் தயாரிப்பில் ஒருவர் ஹீரோவாகவும், இன்னொருவர் இயக்குநராகவும் அறிமுகப்படுத்தி முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியைக் கொடுத்தார். அந்தப் படம் தான் ஜெயம்.

தெலுங்கில் வெளியான ஜெயம் படத்தினை அப்படியே தமிழில் அதேபெயரில் எடுத்தனர். 2003-ல் வெளியான இந்தப் படம் அப்போதுள்ள இளசுகள் மத்தியில் கொண்டாடப்பட்டது. குறிப்பாக 90’s Kidsகளை இந்தப் படம் பெரிதும் கவர்ந்து 100 நாட்களுக்கு மேல் ஓடியது.

இந்தப் படத்தில் தான் ஜெயம் ரவி என்றும், ஜெயம் ராஜா எனவும் இருவருக்குமே பெயர் மாறியது. தனது முதல் படத்தின் பெயரே இருவருக்கும் திரைத்துறையில் அமைந்ததால் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தனர்.

அந்த வகையில் இந்தக் கூட்டணியில் உருவான அடுத்த படம் தான் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி. முதல் படத்தில் சதாவை ஹீரோயினாக அறிமுகப்படுத்திய இயக்குநர் ராஜா. அடுத்த படத்தில் அசினை ஹீரோயினாக தமிழ்சினிமாவில் அறிமுகப்படுத்தினார். இருவருமே தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரவுண்டு வந்தனர்.

உதவி செய்வதில் KPY பாலாவுக்குப் போட்டியாக இறங்கிய கூல் சுரேஷ்.. இது வேற லெவல்ல இருக்கே..!

2004-ல் வெளியான எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் அடுத்த முக்கிய ரோலில் நடித்தவர் நடிகை நதியா. 80களின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்த நதியா பல வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் திரையில் தோன்றியதால் அவரது ரசிகர்கள் அதிகமான எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

அதே போலவே படம் வெளியாகி நதியாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. குறிப்பாக நமக்கும் இப்படி ஒரு தாய் கிடைக்க மாட்டாரா என்று ஏங்க வைத்தது. இந்தப் படத்தில் ஜெயம் ரவியை தந்தை பிரகாஷ்ராஜ் விட்டுச் சென்ற நிலையில் அவரது தாயான நதியா ஒரு சிங்கிள் பேரண்ட்-ஆக வளர்த்து பாக்சிங் விளையாட்டில் அவரைச் சாதனையாளராக மாற்றுவார்.

இப்படி பாதி படம் முழுக்க படத்தில் நதியாவின் ராஜ்ஜியமே நிலைத்திருக்கும். நதியாவின் அதே இளமையும், துறுதுறு நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் இந்தப் படத்தினைப் பார்த்து அப்போது தங்கள் குழந்தைகளை ஒரு சிங்கிள் பேரண்ட்-ஆக வளர்த்தவர்கள் இன்ஸ்பையர் ஆகினர்.

தங்களது குழந்தைகளையும் எப்படியாவது முன்னேற வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வளர்த்து ஆளாக்கினர். இப்படி படத்தைப் பார்த்து இன்ஸ்பைரிங் ஆன ஒரு சிங்கள் பேரண்ட் தன்னுடைய குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியதை பெருமையுடன் இயக்குநர் மோகன் ராஜாவுக்கு தெரிவிக்க இந்தப் படத்தின் உண்மையான வெற்றியை அதில் உணர்ந்திருக்கிறார்.

மேலும் உங்களுக்காக...