ஆண்பாவம் ஷுட்டிங்கில் சீதாவைக் கன்னத்தில் அறைந்த பாண்டியராஜன்.. காமெடி படத்தில் நடந்த முரட்டு சம்பவம்

தமிழில் எவர்கிரீன் 10 காமெடிப் படங்களை வரிசை கட்டினால் நிச்சயம் ஆண்பாவம் படம் அதில் இடம்பிடிக்கும். இயக்குநர் பாக்யராஜிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய பாண்டியராஜன் கன்னி ராசி என்ற படத்தினை இயக்கி வெற்றி கண்டவுடன் இவர் இயக்கிய இரண்டாவது படமாகும். படம் முழுக்க சிரிப்பு வெடிகளை கொளுத்திப் போட்டிருப்பார் பாண்டியராஜன்.

குறிப்பாக பாண்டியராஜன் மற்றும் அவரின் பாட்டியாக நடித்த கொல்லங்குடி கருப்பாயி, வி.கே.ராமசாமி ஆகியோரின் காம்பினேஷன் படம் முழுக்க அதகளம் செய்திருப்பார்கள். இந்தப் படம் காமெடிக்காகவே திரையில் 100 நாட்களைக் கடந்து ஓடியது. மேலும் பாடல்களும் அருமையாக இருக்கும்.

இப்படத்தில் பாண்டியராஜனுடன் ரேவதி, பாண்டியன், சீதா ஆகியோர் நடித்திருந்தனர். நடிகை சீதாவுக்கு இந்தப் படம் தான் அறிமுகம். தனது முதல்படத்தில் சில காட்சிகளில் சரியாக நடிக்காமல் பாண்டியராஜனின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார் நடிகை சீதா. இப்படத்தின் கதைப்படி ஒரு காட்சியில் வாட்ச் ஒன்று கொதிக்கும் நீருக்குள் விழுந்துவிடும் அதனை தன் முந்தானையால் சீதா எடுத்து காதருகே வைத்து ஓடுகிறதா என சோதித்துப் பார்க்க வேண்டும். இதுதான் காட்சி.

பக்திப் படத்துல வந்த ஐட்டம் சாங்.. பாலச்சந்தர் செய்த திருத்தத்தால் எஸ்.பி.முத்துராமனுக்குக் கிடைத்த வாழ்நாள் கௌரவம்

இந்தக் காட்சியில் சீதா நடிக்கும் போது தாவணி முந்தானையை எடுக்க வேண்டும் என பாண்டியராஜன் கூறியதும் அப்படி நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். அதன்பின் தாவணியின் நுனி முந்தானையை மட்டும் நனைத்து எடுத்தால் போதும் என பாண்டியராஜன் கூற அனைத்தும் சரியாக எடுத்துவிட்டு கேமராவைப் பார்த்திருக்கிறார். இதனால் அந்தக் காட்சி வீணாகப் போனது. ஏனென்றால் அந்தக் காட்சியில் அவர் கேமராவைப் பார்க்கக் கூடாது.

அதேபோல் இரண்டாவதாக மாற்று முந்தானையை நனைத்து அதேபோல் அந்தக் காட்சியை மீண்டும் ரீடேக் எடுக்க இந்த முறையும் கேமராவைப் பார்த்திருக்கிறார். பாண்டியராஜனுக்குக் கோபம் வந்துவிட்டது. சரி தாவணியை மாற்றிக் கட்டிவருமாறு கூறி பின்னர் அந்தக் காட்சியை மீண்டும் எடுக்க சீதா மீண்டும் கேமராவை லேசாகப் பார்த்தவாறே எழ, பாண்டியராஜனுக்குக் கோபம் வர அடிக்கக் கை ஓங்க, அவரும் எழ அடி அவர்மேல் விழுந்திருக்கிறது. இதனால் படப்பிடிப்பிலிருந்து கோபித்துக் கொண்டு வெளியேறி இருக்கிறார் சீதா.

அதன்பின் அவரைச் சமாதானம் செய்த பாண்டியராஜன் மீண்டும் அந்தக் காட்சியில் நடிக்க வைத்து பின்னர் படமாக்கியுள்ளார். ஒருவழியாகப் படம் முடிந்தபின் படத்தைப் பார்த்த சீதாவுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தன்னுடைய நடிப்பைப் பார்த்து அவரே ஆச்சர்யப்பட்டு பாண்டியராஜன் காலில் விழுந்து வணங்கியிருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...