கவியரசர் கண்ணதாசன் ஒரு தடவை தனது பதிவில் இப்படி தெரிவித்துள்ளார். இதுவரை தான் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்று. இப்போது ஒருவரது பெயரைக் குறிப்பிட விரும்புகிறேன். அவர் தான் பட அதிபர் சின்னப்ப தேவர் என்கிறார். இவரது வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கியமான சம்பவத்தை இவ்வாறு விவரிக்கிறார் கண்ணதாசன்.
சினிமாத்துறையில் மதுப்பழக்கம், பெண்ணாசை என எதிலும் ஒட்டாதவர் சின்னப்ப தேவர். மிகவும் உத்தமர் இவர் என்று சொல்வார்களே. அப்படிப்பட்டவர்களில் இவரும் ஒருவர். தனது 35வது வயது வரை கடுமையான வறுமை அவரல வாட்டி வதைத்தது. ஆனாலும் நேர்மையையும், நாணயத்தையும் கைவிடாமல் இருந்தார். குஸ்தி கோதா நடத்தினார். சிறிய பால் பண்ணை நடத்தினார். ஜூபிடர் பிக்சர்ஸ் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராகப் பணியாற்றினார். இவரது வரலாறு உழைத்து முன்னேற விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடம்.
வெற்றிலைப் பாக்கு கடையில் இவருக்கு 6 ரூபாய் கடனாகி விட்டது. அதை இவரால் அடைக்க முடியவில்லை. என்ன செய்வது என்றே தெரியவில்லை. கடைகாரனோ அவர் கழுத்தில் துண்டைப்போட்டு முறுக்கியபடி கேட்கிறான். அதனால் அந்தப் பக்கமே போக முடியாமல் கஷ்டப்பட்டார்.
அடிக்கடி கோவைக்குப் பத்து மைல்களுக்கு அப்பால் இருக்கும் மருதமலை முருகன் கோவிலுக்குப் போவார். அப்படி ஒரு தடவை கடைகாரன் அவரிடம் கோபப்படவே, அன்று இரவு மருதமலை போனார். அங்கு போய் உட்கார்ந்து கொண்டு முருகா முருகா என்று அழுவார். என்னைக் காப்பாற்று என்று வேண்டினார்.
நள்ளிரவில் காடுகள் நிறைந்த அந்த மருதமலையை விட்டு இறங்கினார். வழியில் ஒரு சிகரெட் பாக்கெட் கிடந்ததாம். அதைக் காலால் எட்டி உதைத்துக் கொண்டே போனார். கொஞ்ச தூரம் போனதும் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. சிகரெட் பாக்கெட்டை எடுத்துப் பார்த்தார். உள்ளே 2 சிகரெட்டுகளும், பத்து ரூபாயும் இருந்ததாம். அப்படி என்றால் அவரது மனநிலை எப்படி இருக்கும்? அவ்வளவு சந்தோஷமும் மனதில் கரைபுரண்டது.
இதையும் படிங்க… கதிர் நடிப்பில் ‘மாணவன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு… அடடா… போஸ்டரே இப்படி இருக்கே…
நல்லவனாக வாழ்ந்தோம். தெய்வத்தை நம்பினோம். தெய்வம் கைவிடவில்லை என்று தானே அவரது மனம் எண்ணியிருக்கும். அந்த முருகன் அவரை வாழ வைத்தான் என்றே சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு நாளும் முருகா முருகா என உருகுகிறார். தனக்கு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை. பிறருக்கு நஷ்டம் வந்துவிடக்கூடாது என்று எண்ணுகிறார். அப்படியே தொழிலும் செய்கிறார். அதனால் நாளுக்கு நாள் செல்வ செழிப்புடன் வளர்ந்து வருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.