கதிர் நடிப்பில் ‘மாணவன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு… அடடா… போஸ்டரே இப்படி இருக்கே…

நடிகர் கதிர் 2013 ஆம் ஆண்டு ‘மதயானைக் கூட்டம்’ என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2018 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மூலம் நல்ல விமர்சனங்களையும் பாராட்டையும் பெற்றார். ‘பரியேறும் பெருமாள்’ உணர்ச்சி மிகுந்த படமாக இருந்தது.

‘மதயானை கூட்டம்’ திரைப்படத்தில் நடிக்கும் போது கதிர் கல்லூரியில் படித்து கொண்டிருந்தாராம். கல்லூரிக்கு சென்று படித்துவிட்டு மாலை நேரத்தில் ஷூட்டிங்கில் கலந்து கொள்வாராம். மேலும் ‘கிருமி’, ‘என்னோடு விளையாடு’, ‘விக்ரம் வேதா’, ‘பிகில்’ ஆகிய திரைப்படங்கள் நடிகர் கதிர் நடிப்பில் வெளியான குறிப்பிடத்தகுந்த படங்களாகும்.

இந்த நிலையில், தற்போது பார்ச்சூன் ஸ்டுடியோஸ் மற்றும் எமினன்ட் என்டர்டைன்மெண்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் எஸ். எல். எஸ். ஹென்றி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மாணவன்’. ‘பரியேறும் பெருமாள்’ புகழ் நடிகர் கதிர் இப்படத்தின் நாயகனாக நடித்திருக்கிறார்.

இந்தப் படம் அரசியல் மற்றும் காதல் பின்னணியில் உருவான கேம்பஸ் ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கரு. பழனியப்பன், மாஸ்டர் மகேந்திரன், யுவலட்சுமி, அன்புதாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘மாணவன்’ திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார் மற்றும் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒவ்வொரு படத்திலும் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் கதிரின் இந்த திரைப்படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.