ரோலெக்ஸ் சூர்யாவை தொடர்ந்து விஷாலுடன் வில்லன் கூட்டணிக்கு அடி போடும் லோகேஷ் !

Published:

விக்ரமின் சூப்பர் வெற்றிக்குப் பிறகு, லோகேஷ் கனகராஜின் அடுத்த திட்டத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும். இப்படத்தில் விஜய் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி 67 படத்தில் நடிகை சமந்தா விஜய்க்கு வில்லியாக சமந்தா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிகையுள்ளார்.படத்தில் எந்த இசையும் இருக்காது. இந்தத் திரைப்படம் பாடல்களைக் காட்டிலும் பல தீம் மியூசிக்கைப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது .

ரஜினியின் ஜெயிலர் படத்தின் அப்டேட்: அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா?

மேலும் இந்த படத்தில் 6 வில்லன்கள் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய எதிரியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக நடிகர் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

மேலும் மலையாள நடிகர் பிரித்விராஜ் கால்சீட் இல்லாத காரணமாக விஜய்- 67வது படத்தின் வாய்ப்பை தவற விட்டுள்ளார்.அந்த வாய்ப்பை மலையாள நடிகரான நிவின் பாலியை இப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அஜித்தின் துணிவு படத்தில் சுயரூபத்தை காட்டிய மஞ்சுவாரியர்! போட்டோவுடன் வெளியான மாஸ் அப்டேட்!

அதை தொடர்ந்து தற்ப்பொழுது மாஸான தகவல் கிடைத்துள்ளது .படத்தின் முக்கிய வில்லன் வேடத்தில் நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. முன்னதாக விக்ரம் படத்தில் முன்னணி ஹீரோவான சூர்யாவை வில்லனாக களமிறக்கி படத்தில் கலக்கியிருப்பார்.

 

மேலும் உங்களுக்காக...

Leave a Comment