இயக்கத்திற்கு குட் பை சொல்லும் லோகேஷ்! ஹீரோ ஆகும் ஆசை வந்துவிட்டதோ?

Published:

இந்தியாவின் மோஸ்ட் வான்டடு இயக்குனராக வலம் வரும் முன்னணி இயக்குநர் தான் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, விஜய் நடித்த மாஸ்டர், கமல் நடித்த விக்ரம் என வெற்றிகரமான படத்தை இயக்கியுள்ளார். ஆனால் முதல் நான்கு படங்களிலேயே உலக திரை ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

தற்போழுது விஜய் அவர்களும் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 67-வது படமான லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் என்பது ரசிகர்களின் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இன்னும் பத்து படங்களுக்குப் பிறகு படம் இயக்குவதை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள அவர் LCU கான்சப்டிற்க்கு கிடைத்த வரவேற்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தவுடன் அடுத்தடுத்த படங்களில் அந்த வரவேற்பு குறையாத அளவுக்கு பொறுப்பாக செயல்பட உள்ளதாக கூறினார்.

மேலும் 10 படங்களுக்கு பிறகு படம் இயக்குவதை கைவிட திட்டமிட்டுள்ளதாகவும் நீண்ட நாட்கள் இந்த இடத்தில் இருக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறினார். லியோ படத்தை பொருத்தவரை இடைவிடாத படப்பிடிப்பு நடந்து வருவதாக லோகேஷ் கூறினார்.

மேலும் 22 ஆம் தேதி தளபதி விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருப்பதாகவும் கூறினார். அடுத்ததாக தளபதி விஜய் அவர்களை அண்ணா என்று தான் அழைப்பதாகவும் காலை 9 மணிக்கு ஷூட்டிங் என்றால் 7 மணிக்கே ஸ்பாட்டிற்கு வரும் விஜய்யின் உழைப்பை பார்த்து பிரமிப்பதாகவும் தெரிவித்தார்.

சிம்பு, விஷால், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களுக்கு ரெட் கார்டு! காரணம் தெரிஞ்சா ஆடி போய்ருவிங்க!

லியோ திரைப்படம் LCU கான்சப்டிற்க்குள் வருமா என்ற கேள்விக்கு அதற்கு என்னும் சில நாட்கள் இருக்கிறது அப்போது பார்த்து கொள்ளுங்கள் என கூறினார்.

மேலும் உங்களுக்காக...