வசூலை அள்ளிக் குவிக்கும் ஆதிபுருஷ்.. மோசமான விமர்சனங்கள் இருந்தும் இமாலய வசூல் சாதனை!

Published:

நடிகர் பிரபாஸ் நடித்த ‘ஆதி புருஷ்’ படத்தின் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

பாலிவுட்டின் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் வெளியாகி உள்ள புராணத் திரைப்படம் ‘ஆதி புருஷ்’.

இந்த படத்தில் ‘பாகுபலி’ படப்புகழ் நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

WhatsApp Image 2023 06 19 at 11.05.46 PM 1

‘வாரிசு’ பட ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சன்சிட் பல்ஹாரா மற்றும் அன்கிட் பல்ஹாரா சகோதரர்கள் இசையமைத்திருக்கிறார்கள்.

ராமாயண காவியத்தை தழுவிய இந்த திரைப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், கிருஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுடர், ராஜேஷ் நாயர் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

‘ஆதி புருஷ்’ இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஜூன் 16, 2023 அன்று வெளியாகி இருக்கிறது.

WhatsApp Image 2023 06 19 at 11.05.46 PM 3

படம் வெளியானது முதல் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இருப்பினும் ஆதிபுருஷ் திரைப்படம் உலகம் முழுவதும் 3 நாட்களில் 340 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. முதல் நாள் மட்டும் 140 கோடி ரூபாய் வரை வசூலித்து உள்ளது. இந்தி மொழியில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக ஆதிபுருஷ் திரைப்படம் உருவெடுத்துள்ளது.

WhatsApp Image 2023 06 19 at 11.05.46 PM 2

மேலும் உங்களுக்காக...