லிங்குசாமி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் லிங்குசாமி. அதற்குப் பிறகு 2001 ஆம் ஆண்டு ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அதை தொடர்ந்து ரன், சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனராக இருக்கிறார் லிங்குசாமி.
படம் இயக்குவதை தவிர தயாரிப்பாளராக தீபாவளி, வேட்டை, கும்கி, இடம் பொருள் ஏவல், உத்தம வில்லன், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார் லிங்குசாமி. இவர் இயக்கி மிகவும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம் தான் சண்டக்கோழி. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சண்டக்கோழி 2 கூட வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் விஷாலின் திருமணத்தை குறித்து அவரது தந்தை கூறிய ரகசியத்தை பகிர்ந்து இருக்கிறார் லிங்குசாமி.
லிங்குசாமி கூறியது என்னவென்றால், சண்டக்கோழி 2 படம் எடுக்கும் போது கீர்த்தி சுரேஷை பார்த்த விஷாலின் அப்பா என்னிடம் அவரை விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க பொண்ணு கேட்க சொன்னார். நான் கீர்த்தி சுரேஷிடம் பேசினேன். அவர் கல்லூரியில் படிக்கும் போது இருந்தே ஒருவரை காதலிப்பதாக கூறினார். அவரை தான் தற்போது கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துள்ளார் என்று ரகசியத்தை உடைத்து பேசி இருக்கிறார் லிங்குசாமி.