லியோ படத்தின் முழுக் கதையும் இணையத்தில் லீக்! அதிர்ச்சியில் படக்குழு!

Published:

பீஸ்ட், வாரிசு படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் விஜய். ஏற்கனவே மாஸ்டரில் இணைந்த இந்த கூட்டணி மெகா ஹிட் கொடுத்தது. சமீபத்தில் வெளியான இரண்டு படங்களும் சுமாரான வெற்றி பெற்றதால் விஜய் இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

விஜய்யின் பிறந்த நாளை ஒட்டி கடந்த ஜூன் 22ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்வும் வெளியானது. படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. சமுக வலைத்தளங்களிலும் இந்த பாடல் டிரெண்டிங்கில் உள்ளது. அதை தொடர்ந்து முதல் லுக்கில் கையில் சுத்தியலுடன் ரத்தம் தெறிக்கும் விதத்தில் விஜய் இருந்தார். இதை பார்ப்பதற்கு படம் ஒரு ஆக்சன் கதையாக தான் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் லியோ படத்தின் கதை இது தான் என சில தகவல் இணையத்தில் கசியத் துவங்கியுள்ளது. அதாவது காஷ்மீரில் பேக்கரி கடை மற்றும் காப்பி ஷாப் வைத்து விஜய் தனது மனைவி மற்றும் மகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார். படத்தில் விஜய்யும் திரிஷாவும் கணவன் மனைவியாக நடித்திருக்கிறார்கள்.

விஜய்க்கு படத்தில் பெயர் பார்த்திபன். அப்போது ஒரு மிகப்பெரிய மாஃபியா கும்பலால் பிரச்சனையை ஏற்படுகிறது. அவர்களுடன் விஜய் மோதும் படி சூழல் உருவாகி மோதலும் நடக்கிறது. இதற்கிடையே விஜய்க்கும் ஏற்கனவே ஒரு கேங்குக்கும் பிரச்சனை இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் இருந்து தனது அடையாளத்தை மறைத்து தான் காஷ்மீரில் காபி ஷாப் வைத்து வாழ்ந்து வந்திருப்பார்.

ஒரே நாளில் வெளியாகும் 8 தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ!

ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் புதிய பிரச்சனையால் விஜய்யின் இருப்பிடம் அவரின் முன்னால் எதிரிகளுக்கும் தெரியவரும் அப்போது பிளாஸ் பேக் ஒன்று செல்லும் அதனை தொடர்ந்து இரண்டு கும்பலையும் விஜய் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை என்ற தகவல் தான் இணையத்தில் பரவி வருகிறது.

காஷ்மீரில் தொடங்கிய சூட்டிங் சென்னை மற்றும் திருப்பதியில் நடந்தது. சமீபத்தில் தான் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், டப்பிங் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இணையத்தில் வெளியான இந்த கதை உண்மையா பொய்யா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

மேலும் உங்களுக்காக...