ஒரே நாளில் வெளியாகும் 8 தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ!

விஜய் அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் போது மட்டுமே கலை கட்டி வந்த திரையரங்குகள் தற்போது குறைந்த பட்ஜெட் படங்கள் ரிலீஸ் நேரத்திலும் பிசியாகவே உள்ளன.

பொதுவாக படம் நன்றாக இருந்தால் போதும் புதிய இயக்குனர்கள் மற்றும் அறிமுக நடிகர்களை கூட கொண்டாட தொடங்கியுள்ள மக்கள்தான் அதற்கு காரணம். நீண்ட காலத்திற்கு பிறகு நாளை ஒரே நாளில் 8 தமிழ் திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது.

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம்,சுரபி, ரெடிங் கிங்ஸ்லி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள படம் டிடி ரிட்டன்ஸ். முழு நீள நகைச்சுவை படமாக இந்த படம் உருவாகியுள்ளது. நாளை வெளியாகும் இந்த படத்தில் சந்தானம் மீண்டும் காமெடியனாக கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோனி தயாரிப்பில் ரமேஸ் தமிழ் மணி இயக்கத்தில் உருவாகும் எல்.ஜி.எம் படம் நாளை வெளியாக உள்ளது.இந்த படத்தில் நடிகை நதியா, ஹரிஷ் கல்யாண், லவ்டூடே நாயகி இவானா, யோகிபாபு ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரிப்பில் நடிகர் பரத்தின் 50-வது படம் தான் லவ். படத்தில் வாணி போஜன், விவேக், பிரசன்னா, பிக் பாஸ் டானி,ராதாரவி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

மோகன் கோவிந்த் இயக்கத்தில் அஸ்வின், பவித்ரா மாரிமுத்து, ரவீனா தஹி நடிக்கும் திகில் திரைப்படம் தான் பிட்சா 3. இப்படத்தினை தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

விஜய்க்கு போட்டியாக ஷாருக்கானை களமிறக்கும் அட்லி! ஒரு பாடலுக்கு மட்டும் இத்தனை கோடியா?

எம்.ஆர். மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக் மற்றும் சாய் ப்ரியா தேவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் டைனோசரஸ், மேலும் ஸ்ரீனி, மானெக்ஷா டி, ஜானகி சுரேஷ் மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

மேலும் டெரர், அறமுடைத்த கொம்பு, யோக்கியன் படங்களும் ரிலீஸ் ஆவதால் வலுவான போட்டிக்கு இடையே எந்த படம் மக்களின் மனதை கவர்ந்து ஹிட் அடித்து வசூல் சாதனை படைக்கும் என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...