விஜய், ஷாருக்கான் வைத்து டபுள் கேம் விளையாடும் அட்லி! நல்ல ஐடியாவா இருக்குதே!

Published:

தென்னிந்திய விஜய் ரசிகர்கள் லியோ திரைப்படம் எப்போது வெளியாகும் என பலத்த எதிர்பார்ப்பில் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். மேலும் இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாகவும் உருவாக்கியுள்ளது. அதற்கான புரொமோஷன் பணிகளும் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் மற்ற படங்களை போல இல்லாமல், நேரம் பார்த்து சரியான தருணத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பு குறையாத வண்ணம் அடுத்தடுத்த அப்டேட்களை சிறப்பாக வெளியிட்டு வருகின்றனர். அதிலும் விஜய் புரொமோஷனுக்காக ஒரு தரமான சம்பவம் செய்து முடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அது என்ன தெரியுமா.. நம்ம அட்லீ இயக்கத்தில் ஜவான் படம் வரும் செப்டம்பர் மாசம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதி, நயன்தாரா என தென்னிந்திய நடிகர்கள் நடித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஷாருக்கான் மற்றும் தளபதி விஜய், அட்லி இவர்கள் மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் ஒரு நேரத்தில் பயங்கரமாக வைரலானது.

அப்போது விஜய்யும் இந்த ஜவான் படத்தில் நடித்துள்ளதாக பயங்கரமான ஒரு கதை எல்லாம் வேகமாக பரவ துவங்கியது. அந்த நேரத்தில் இது எல்லாம் உண்மை இல்லை எனவும் ஒரு தரப்பில் இருந்து கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின் படி தளபதி விஜய் உண்மையிலேயே ஜவான் திரைப்படத்தில் ஒரு கேமியோவாக நடித்துள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த தகவல் யாருக்கும் தெரியக்கூடாது என்று ரொம்பவே ரகசியமாக பிளான் பண்ணி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரே நாளில் வெளியாகும் 8 தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ!

மேலும் விஜய் அவர்கள் ஜவான் படத்தில் நடிக்க சில தனிப்பட்ட காரணங்கள் உள்ளது. விஜய்யின் லியோ திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்ய வேண்டும் என்பதற்காகவும், பாலிவுட் ரசிகர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் என எல்லாருமே லியோ படத்தை கொண்டாட வேண்டும் என்பதற்காகவும் தளபதி விஜய் அவர்கள் இந்த ஒரு மாஸ்டர் பிளான் போட்டு ஜவான் படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஜவான் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார் என தெரிந்தால் தமிழ் சினிமா ரசிகர்களும் ஜவான் படம் பார்க்க அதிக வாய்ப்புள்ளதால் இந்த முடிவில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

மேலும் உங்களுக்காக...