சார்லி சாப்ளின் காமெடி சினிமா எம்.ஜி.ஆர் நடிப்பில் சீரியஸான படமாக மாறிய ரகசியம்..

Published:

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மன்னாதி மன்னன், நாடோடி மன்னன் என வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துக் கொண்டிருந்த சமயம் அது. இப்படி மக்கள்திலகம் எம்.ஜி.ஆரை அந்த மக்களே மயங்கும் அளவிற்கு எளிமையான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தால் எப்படி இருக்கும்.

ஆம்.. அப்படி உருவானது தான் பெற்றால்தான் பிள்ளையா திரைப்படம். இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன்- பஞ்சு இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் 1966-ல் வெளியானது.

எம்.ஜி.ஆரை வைத்து படத்தினை இயக்க ஆசைப்பட்ட இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு அவரின் ஹீரோயிசத்தைக் காட்டாமல் அவர் நடிப்புக்குத் தீனி போடும் படமாக ஒன்றை இயக்க ஆசைப்பட்டனர்.

அப்படி அவர்கள் மூளையில் உதித்த ஐடியாதான் சார்லி சாப்ளின் நடித்த கிட் திரைப்படம். சார்லி சாப்ளின் காமெடியாக நடித்த கதாபாத்திரத்தை எம்.ஜி.ஆருக்காக சீரியஸாக உருவாக்கினார்கள். ஒரு சாதாரண ரிக்ஷாகாரரையு, ஓர் அநாதைக் குழந்தை பற்றிய கதை.

பல தயாரிப்பாளர்களை இந்தக் கதையைக் கொண்டு அணுகிய போது அனைவரும கையை விரித்திருக்கின்றனர். ஆனால் ஒருவர் மட்டும் முன்வந்தார். அவர்தான் எம்.ஆர். ராதா. படத்தின் பணிகள் ஆரம்பமானது.

விஜய் சாரின் இறுதிப் படத்தை இந்த மாதிரி தான் எடுக்கப் போறேன்… H வினோத் பகிர்வு…

எம்.ஜி.ஆர் அப்போது உச்சத்தில் இருந்ததால் அவர் கூறியபடியே நடிகர், நடிகைகள், இசை, பாடல்கள் என அனைத்தும் நடைபெற வேண்டும் என்ற பிம்பம் இருந்தது. ஆனால் அது பெற்றால் தான் பிள்ளையா படத்தில் சுக்கு நூறாக உடைந்தது.

எம்.ஜி.ஆர். எதிலும் தலையிடவில்லை. இயக்குநர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். சௌகார் ஜானகி, சரோஜாதேவி ஆகியோர் நடிப்பில் படம் உருவானது. இந்தப் படத்தின் ஷுட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் எம்.ஜி.ஆருக்கும், சரோஜாதேவிக்கும் சிறிய கருத்து வேறுபாடு இருந்தது.

இதனால் ஒருவரையொருவர் பேசிக்கொள்ளாமல் இருந்தனர். ஆனால் ஷூட்டிங்கின் போது தங்களுக்குள் இருக்கும் கருத்துவேறுபாட்டை மறந்து கதைக்கு ஏற்றாற்போல் உணர்ச்சிப் பூர்வமாக நடித்தனர். படம் வெளியானது எம்.ஜி.ஆரை எப்படி கிருஷ்ணன் -பஞ்சு காட்ட நினைத்தார்களோ அது நடந்தது. மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். படம் சூப்பர் ஹிட்டானது.

மேலும் கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்…, நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது நம்பி.. போன்ற காலத்தால் அழியாத பாடல்களும் இந்தப் படத்தில் இடம்பெற்றது தான்.

மேலும் உங்களுக்காக...